ப.பாண்டி விமர்சனம்

சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான ராஜ்கிரண், தன் மகன் பிரசன்னா, மருமகள் சாயா சிங், பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார். வயதானாலும் இவர் வசிக்கும் பகுதியில் நடக்கும் தவறுகளை துணிச்சலுடன் தட்டிக் கேட்கிறார்.

இதனால் போலீஸ் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறது. இது பிரசன்னாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் ராஜ்கிரணிடம் பிரசன்னா கடுமையாக நடந்துகொள்கிறார். எனவே, இவர்களுக்கு இனிமேல் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைக்கும் ராஜ்கிரண், வீட்டைவிட்டு வெளியேறி தனது புல்லட்டில் நீண்ட தூரம் பயணம் செய்கிறார்.
அப்போது வழியில் அவரது வயதையொட்டிய சிலபேர் நண்பர்களாக கிடைக்க, அவர்களிடம் தனது முதல் காதலியை பார்க்க செல்வதாக கூறுகிறார். அவள் எங்கிருக்கிறாள்? என்பது தெரியாத ராஜ்கிரணுக்கு, நண்பர்கள் பேஸ்புக் பற்றி அவருக்கு தெரியவைத்து, அதன்மூலம் அவரது காதலியை தேட துணை புரிகிறார்கள்.

அதன்படி, ராஜ்கிரணும் தனது காதலி ஐதராபாத்தில் இருப்பதாக அறிந்து, அங்கே செல்ல முடிவெடுக்கிறார். இதற்கிடையில், அப்பாவை காணாது தவிக்கும் பிரசன்னா, அவரை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
கடைசியில், ராஜ்கிரண் தனது முன்னாள் காதலியை தேடிக் கண்டுபிடித்தாரா? பிரசன்னாவும் காணாமல் போன தனது அப்பாவை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
ராஜ்கிரண் ரொம்ப யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். வீட்டில் வயதான நிலையில் உள்ள பிரபலமான மனிதர்களின் வாழ்வியல் உண்மையை உளவியல் சார்ந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ்.
சின்ன வயது ராஜ்கிரண் ஆக தனுஷ் வந்தாலும் ஸ்பெஷல் எதுவும் இல்லாத காட்சிகளை வைத்து ராஜ்கிரனை மட்டுமே முக்கியப் படுத்தி இருக்கிறார் தனுஷ்.
நீண்ட நாளுக்கு பின்னர் ரேவதி கொஞ்சமாக வந்தாலும் மனசில் நிற்கிறார்.
நடிகராக, தயாரிப்பாளர் ஆக பெற்ற வெற்றியை இயக்குனர் ஆகவும் தனுஷ் தக்க வைத்துக் கொண்டார்.

Related posts

Leave a Comment

four × 4 =