ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘காதல் Vs. காதல் -க்கு பூஜை போட்டாச்சு!

கிரியேட்டிவ் டீம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் நிறுவனத்தின் சார்பில்  B. தர்மராஜ் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காதல் Vs. காதல்’.இந்தப் படத்தில் ஆரி நாயகனாகவும் ஐஸ்வர்யா தத்தா நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். A.G.மகேஷ் இசை அமைக்க, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ‘அய்யனார்’ படத்தை இயக்கிய இயக்குநர் S.S.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார்.

மற்ற நடிகர் நடிகைகள், தொழில்  நுட்ப குழுவினர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் கதை, கவிதை நயம் கொண்ட காதல் கதை. காதல் கதையம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு. 1960’களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது. 1980-ம் ஆண்டுகளில் ஜாதி தடையாக இருந்தது. 2000-ம் ஆண்டுகளில் பொருளாதார அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே, காதலுக்கு தடையாக உள்ளது. இதைப் பிரதிபலிக்கும்விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதைக் களம்தான் இந்த ‘காதல் Vs. காதல்’ திரைப்படம்.

இந்தப் படத்தில் கடந்து போன காதலையும் பார்க்கலாம். இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம். உங்க காதலை பார்க்க தயாராகுங்கள்.இந்தப் படத்தின் இரண்டு பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படம் பிடிக்கவுள்ளனர்.

புதிய படத்தின் படப்பிடிப்பு அண்மையில் சென்னை முகப்பேரிலுள்ள ஸ்ரீலக்ஷ்மி சாய்பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது. படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது.

Related posts

Leave a Comment

sixteen − 14 =