பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி சொன்ன ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலின், சச்சின், அமிதாப் பச்சன், கமல் உள்பட ஏராளாமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்தும் நன்றி கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுவதால், அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், வாழ்வ வளமுடன் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல், நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், தனது நண்பர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது பல ஆண்டு கால நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, விக்ரம், மோகன்லால், நயன்தாரா உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்களும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், ஆகியோரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் ரஜினி, வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தளபதி அவர்களே என மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார். மேலும் நன்றி கமல் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அத்துடன் மரியாதைக்குரிய அமிதாப் பச்சன், தமது தூண்டுகோல் என்றும், வாழ்த்துக்கு மிக்க நன்றி என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், இயக்குநர் ஷங்கர், மோகன்லால், பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர் ஆகியோருக்கும், நடிகர் ரஜினிகாந்த் தனித்தனியாக ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment

twenty − 13 =