சேரன் இயக்கத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிக்கும் ‘திருமணம் சில திருத்தங்களுடன்’ படம்!

கிட்டத்தட்ட நான்கு ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் ‘திருமணம்’[சில திருத்தங்களுடன்] என்னும் திரைப்படத்தின் இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு திரும்புகின்றார் இயக்குநர் சேரன்! இன்று தனது 54-வநு பிறந்தநாளினையொட்டி காலை பிரசாத் லேப்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சந்திப்பின் போது தனது அடுத்த திரைப்படமான ‘திருமணம்’[சில திருத்தங்களுடன்] குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்திற்கு பின்னர் நீண்ட ஓய்வில் இருந்த சேரன் தற்போது மீண்டும் திரையுலகம் திரும்புகின்றார். இடைப்பட்ட காலத்தில் ‘சிஹெச் 2 போன்ற சிக்கல்களில் சிக்கிய சேரன், திரைப்பட பூஜை மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் இன்று தனது சினிமா வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தினை குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தின் நாயகனாக நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிக்கிறார். ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’ ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சேரன், “ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை படம் என்னை பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிட்டது. இதனால் சினிமா எடுக்க முடியாமல் தவித்தேன். என்னை வைத்து எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்க முன்வரவில்லை. காரணம் என்னுடைய பொருளாதார பிரச்சினைகள். இங்கு பணம் தான் எல்லாமே. பணம் இல்லை என்றால் பிணம் தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பிரனிசிஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்னை தேடி வந்து இந்த வாய்ப்பை தந்தனர். என்னுடைய பொருளாதார பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்தனர். அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

விஜய் சேதுபதிக்கான கதையை தயாரித்து வைத்திருக்கிறேன். அவர் எப்போது ஓகே சொன்னாலும் படப்பிடிப்புக்கு சென்றுவிடலாம். அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் கடந்த இரண்டு வருடங்களாக என்னை இயக்கியது. இந்த படம் உளவியல் ரீதியாக நம் வாழ்வை பேசும். கதையை காமெடியாக சொல்லியிருக்கிறோம். நம் வாழ்வில் எப்படி எல்லாம் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை இதில் சொல்லியிருக்கிறோம்” என அவர் பேசினார்.

Related posts

Leave a Comment