‘பப்பு’ என்ற கிண்டலடிக்கப்பட்ட ராகுல் தற்போது ‘மிகவும் மதிக்கப்படும்’ நபர் : ராஜ் தாக்ரே

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, பப்பு என எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், தற்போதைய தேர்தல் வெற்றியின் மூலம், மிகவும் மதிக்கப்படும் நபராக ராகுல் உயர்ந்திருப்பதாக, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரே புகழாரம் சூட்டியிருக்கிறார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், தனித்தே தேர்தல் களத்தை ராகுல் காந்தி வளைய வந்த நிலையில், தீவிரமாக போராடி வெற்றிப்பெற்றிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இதன்மூலம், பொடிப்பையன் என்று எதிர்க்கட்சிகளால் அழைக்கப்பட்ட ராகுல் காந்தி, அனைவராலும், மிகவும் மதிக்கப்படும் நபராக மாறியிருப்பதாகவும் ராஜ்தாக்ரே புகழாரம் சூட்டியிருக்கிறார்.

மேலும், ராகுல் காந்தியின் தலைமை தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை, அவரது ஒவ்வொரு செயல்பாடுகளும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ராஜ்தாக்ரே கூறியிருக்கிறார்.

Related posts

Leave a Comment

18 − five =