திருவாரூர் இடைத் தேர்தல் : ஸ்டாலின் குஷி

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்பட 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஜனவரி 2 ஆம் தேதி காலை 10 மணி முதல் 3 ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். ரூ.1,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.25,000. வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக வைகோவின் மதிமுக கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அதேபோல் கூட்டணி தர்மப்படி திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ள நிலையில் திமுகவின் பலம் அதிகரித்துள்ளது.

Related posts

Leave a Comment

fifteen − eight =