மனநலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் “ஆயிஷா” !

Grace production தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ரபீக் முஹம்மது இயக்கத்தில் புதுமுகம் ரவிகுமார் நடிப்பில் உருவாகும் படம் ” ஆயிஷா” இதில் கதாநாயகியாக உத்தரவு மகாராஜா படத்தில் மதுமிதா நடிக்கிறார் மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ரமேஷ் கண்ணா, முத்துக்காளை ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து இயக்குனர் ரபீக் முஹம்மது பேசுகையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். இப்படத்திற்கு லெனின் ஜோசப் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீ விஷ்ணு படத்தொகுப்பை மேற்கொள்ள நடன இயக்குனராக பவர் ஸ்டார்-வும் ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பாளராக பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் துவக்க விழா பிரசாத் லேப் -ல் 19.01.2019 அன்று பூஜையுடம் துவங்கியது.இவ்விழாவில் கில்டு தலைவர் ஜாகுவர்தங்கம், தயாரிப்பாளர் மக்கள் தொடர்பாளர் விஜய்முரளி, கதையாசிரியர் கலைஞானம், வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Related posts

Leave a Comment