இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்து பல கமர்சியல் படங்களை கொடுத்து வெற்றி இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தவர் பின்னர் அங்காடி தெரு மூலம் நடிகராக களம் இறங்கினார் . அதை தொடர்து சில படங்களில் நடித்து தனக்கென அதிலும் ஒரு இடத்தை பிடித்தார். தற்போது நேத்ரா படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இப்பேர்பட்ட இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தயாரித்து, இயக்கி உள்ள படம் நேத்ரா. இதில் வினய், தமன் குமார், சுபிக்ஷா, ரித்விகா, மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். படம் தயாராகி நீண்ட நாள் கிடப்பில் கிடந்த இந்தப் படத்தை நடிகர் தியாகராஜன் தனது ஸ்டார் மூவீஸ் சார்பில் வெளியிடுகிறார்.
இதுகுறித்து இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:
எனக்கு ஒரு திகில் படம் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்காகவே இந்த கதையை தயார் செய்தேன். கதை வெளிநாட்டில் நடப்பதால் கனடா நாட்டில் 95 சதவிகித படப்பிடிப்பு நடந்தது. திகில் படமாக இருந்தாலும், காமெடி செண்டிமென்ட் கலந்து உருவாகி உள்ளது. தற்போது படத்தை தியாகராஜன் வெளியிடுகிறார். வருகிற பிப்ரவரி 7ந் தேதி வெளிவருகிறது. என்றார்.
இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று முன் தினம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது .