காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில், தமிழக ராணுவ வீரர்களான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சவலப்பேரி மேலத்தெருவில் உள்ள சுப்ரமணியமும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பழூர் கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்த சிவசந்திரனும் உயிரிழந்தனர். இருவரது வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறி, இரு குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார் நடிகர் அம்சவர்தன். இவர், மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஆவார்.
