காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து நான் எப்போதோ விலகி விட்டேன் ; ராகுல் திட்டவட்டம்!

‘காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டேன். இனியும் நீண்ட நாட்களுக்கு அப்பதவியில் நீடிக்க முடியாது’ என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வென்று மீண்டும் படுதோல்வியை சந்தித்தது. காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் ராகுலே தோல்வி அடைந்தார். எனவே, தோல்விக்கு முழு  பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் கடந்த மே 25ல் அறிவித்தார். அப்போது, மூத்த தலைவர்கள் மீதும் அவர் பல்வேறு குற்றச்சாட்டை சுமத்தினார். ஆனால், ராகுலின் ராஜினாமாவை செயற்குழு நிராகரித்தது. மேலும்,  அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுமென மூத்த தலைவர்கள் பலரும் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். தொண்டர்களும் நாடு முழுவதும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.ஆனால், ராஜினாமா முடிவில் உறுதியாக இருந்த ராகுல் நேற்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கனவே தான் ராஜினாமா செய்து விட்டதாக அவர் கூறினார். ெடல்லியில் நேற்று ராகுலிடம், எதிர்கால திட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, ‘‘நான் ஏற்கனவே தலைவர் பதவியை ராஜினாமா  செய்து விட்டேன். இனியும் நீண்ட நாட்களுக்கு தலைவராக பதவி வகிக்க முடியாது. எனவே, கட்சி மேலிடம் இனியும் தாமதிக்காமல் புதிய தலைவரை விரைந்து தேர்வு செய்ய வேண்டும். புதிய தலைவரை தேர்வு செய்யும் விவகாரத்தில் நான்  ஈடுபடவில்லை. புதிய தலைவர் நேரு காந்தி குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கக் கூடாது,’’ என்றார். இதனால், தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராகுல் தனது டிவிட்டர் கணக்கில், ‘காங்கிரஸ் தலைவர்’ என குறிப்பிட்டு வந்தார். நேற்று அதிலும் மாற்றம் செய்தார். தனது பெயருக்கு கீழே காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டிருந்தார்.இடைக்கால தலைவர் மோதிலால் வோரா? தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ராகுல் அறிவித்த, அடுத்த சில மணி நேரத்தில் காங்கிரசின் இடைக்கால தலைவராக 90 வயதான மோதிலால் வோரா நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்,  மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வராவார். ேநரு குடும்பத்தை சேராதவர் தலைவராக நியமிக்கப்பட வேண்டுமென ராகுல் வலியுறுத்தி உள்ள நிலையில், காங்கிரசின் புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

Leave a Comment