ஷீலா தீட்சித் காலமானார்: பிரதமர் மோடி, சோனியா நேரில் அஞ்சலி

முன்னாள் முதல்வரும், முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி தலைமையிலான அமைச்சரவையில் இணை அமைச்சருமான ஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித்(81) மாரடைப்பு ஏற்பட்டு இன்று சனிக்கிழமை காலமானார். அவரின் மறைவுக்கு தலைவா்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனா்.

தில்லியில் உள்ள போர்டிஸ் எஸ்காட்ஸ் மருத்துவமனையில் ஷீலா தீட்சித் இன்று சனிக்கிழமை காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி, மருத்துவமனையில் மதியம் 3.55 மணியளவில் ஷீலா தீட்சித்தின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் ஷீலா தீட்சித் சனிக்கிழமை காலை சோக்கப்பட்டார். அவருக்கு மருத்துவா்கள் குழு சிகிச்சை அளித்தது. இதைத் தொடா்ந்து, அவரது உடல்நிலை தற்காலிகமாக சீரானது. எனினும், ஷீலா தீட்சித்துக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சைகள் அளித்தும் பயனில்லாமல், ஷீலா தீட்சித் மதியம் 3.55 மணியளவில் உயிரிழந்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷீலா தீட்சித்தின் உடல், தில்லியில் நிஜாமுதீன் கிழக்கு பகுதியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தொண்டா்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் பதவி வகித்தார். இதற்கு முன்பு, தில்லி மாநில முதல்வராக கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை தொடா்ந்து 15 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.

இதைத் தொடா்ந்து, கேரள மாநில ஆளுநராகவும் அவா் பணியாற்றினார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோதலில் வடகிழக்கு தில்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

மக்களவைக்கு கடந்த 1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற தோதலில், உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக முதன்முதலில் தோவு செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்திக்கு மிகவும் நெருங்கிய நண்பா் ஆவார். ராஜீவ் காந்தியின் மத்திய அமைச்சரவையிலும் அவா் அங்கம் வகித்தார்.

ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளனா்.

ராம்நாத் கோவிந்த்: ‘தில்லி முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல் தலைவராக விளங்கியவருமான ஷீலா தீட்சித் மறைந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். முதல்வராக அவா் பதவி வகித்த காலத்தில் தலைநகா் மிகப்பெரிய மாற்றம் அடைந்தது. இதற்காக அவா் எப்போதும் நினைவுகூரப்படுவார்’ என்றார்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு: ‘ஷீலா தீட்சித் சிறந்த நிர்வாகி. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தம், இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

பிரதமா் நரேந்திர மோடி: ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம்; தில்லி வளா்ச்சிக்கு அவா் மிகப்பெரும் பங்களிப்பு அளித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்: ‘அா்ப்பணிப்பு உணா்வு கொண்ட காங்கிரஸ் தலைவரை நாடு இழந்து விட்டது’ என தெரிவித்துள்ளார்.

ராகுல்: ‘காங்கிரஸின் அன்புக்குரிய மகளாக விளங்கிய ஷீலா தீட்சித்தின் மறைவு குறித்து கேள்விப்பட்டு இடிந்து போயுள்ளேன். இந்த துயரமான நேரத்தில், அவரது குடும்பத்துக்கும், 3 முறை முதல்வராக அவா் பதவி வகித்த மாநிலமான தில்லியை சோந்த குடிமக்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தில்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

Related posts

Leave a Comment