இந்தியாவின் பார்வையற்ற முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பிரஞ்சால் பட்டீல்!

பார்வை குறைபாடு உள்ள முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பிராஞ்சால் பட்டீல் பதவியேற்றுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ் நகரை சேர்ந்தவர் பிராஞ்சால் பட்டீல்(31). இவர் தனது ஆறாவது வயதில் பார்வை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டார். சிறு வயது முதலே கல்வியின் மீது தீரா தாகம் கொண்ட பிராஞ்ஜல் பாட்டில் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் யுபிஎஸ்சி தேர்வுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். விடா முயற்சியால் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தனது முதல் முயற்சிலேயே 773 வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவருக்கு இந்திய ரயில்வே துறையில் பணி கிடைத்தது. எனினும் இவருக்கு பார்வை குறைபாடு இருந்ததால் அந்தப் பணி ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் மனம் தளராத பிராஞ்ஜல் பாட்டில் மீண்டும் 2017ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார். இந்தத் தேர்வில் அவர் 124 வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) பதவி அவருக்கு கிடைத்தது. இதற்கான பயிற்சியின் போது இவர் எர்ணாகுளத்தின் உதவி ஆட்சியராக பணியாற்றினார்.

இந்நிலையில், தற்போது பணி பயிற்சி நிறைவு பெற்றவுடன் இவர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகபணியமர்த்தப்பட்டுள்ளார். இந்தப் பதவியை அவர் ஏற்ற பின்னர் ஊடகங்களை சந்தித்த அவர், ‘ஒரு போதும் நாம் தோல்வி அடைந்து விட்டதாக கருதக் கூடாது. ஒரு போதும் முயற்சியை மட்டும் கைவிடகூடாது. நமது விடாமுயற்சியின் மூலம் நமக்கான திருப்பு முனை என்பது வந்தே தீரும்’ எனக் கூறினார். இவர் இந்தியாவில் பணயமர்த்த படும் பார்வை குறைபாடு உள்ள முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற சாதனையை இவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment