மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி கின்னஸ் உலக சாதனை முயற்சி !

சாதனைப் புத்தகங்களின் பக்கங்களில் சரித்திரம் படைக்கும் செயலாக அதில் மாணவர்களின் பெயர்களைப் பதிவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுவரும் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி, தனது பள்ளியின் மழலை மனம் மாறா முதல் வகுப்பு மாணவி
சி. சாராவின் ரூபிக்ஸ் கியூப் சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகம் இந்திய சாதனை புத்தகம் மற்றும் தமிழ்நாடு சாதனை புத்தகங்களின் பக்கங்களின் பொன் எழுத்துக்களால் பொறிக்கும் முயற்சியினை திறம்பட நிறைவேற்றியது.

இதனை யொட்டி பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன் தலைமையில் மாணவி சி.சாரா கண்களை கட்டியபடி ஐந்து ரூபிக்ஸ் கியூப் புதிர்களை கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ஒப்புவித்த படியே 3 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் விடுவித்து உலகின் இளம் சாதனையாளர் விருதினை வென்று சாதனை படைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருகைதந்த திரைப்பட நடிகையும் முன்னாள் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு இளம் சாதனை மாணவியின் சாதனையைக் கண்டு வியந்ததுடன் மனமாரப் பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சாராவின் இம்முயற்சி எதிர்கால மாணவர்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும் செயலாகும் அமைந்திருந்தது. வேலம்மாள் வித்யாலயா பள்ளி, இத்தகைய உலகளாவிய சாதனை முயற்சிகளை நிறைவேற்றும் மாணவர்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. பள்ளியின் நிர்வாகம் மாணவியின் அரிய சாதனை முயற்சியை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தது.

Related posts

Leave a Comment

1 × two =