இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ பட பூஜை கோலாகலம்!

நாகஷேகர் மூவிஸ் – ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ பட பூஜை சிறப்பாக நடந்தேறியது.

‘அரண்மனை’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்த நாகஷேகர், அதனைத் தொடர்ந்து ‘சஞ்சு வெட்ஸ் கீதா’, ‘மைனா’ ஆகிய வெற்றிப் படங்களைத் தந்ததால் ஒரு ஜனரஞ்சகமான இயக்குனர் பட்டியலில் இணைந்தவர். ‘ரெபல் ஸ்டார்’ அம்பரீஷ் – சுமலதா தம்பதியின் வாரிசான அபிஷேக்கை ‘அமர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தி, பெரு வெற்றியடையச் செய்தவர்.

தற்போது முற்றிலும் புதிய பரிமாணத்தில், ஒரு வித்தியாசமான கதைகளத்துடன், மென்மையான தொரு காதல் கதையான ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ திரைப்படத்துடன் தமிழ் திரையுல கில் தடம் பதிக்கிறார் நாகஷேகர். இது குறித்து ‘அரண்மனை படத்தின் மூலம் கன்னட பட உலகில் இயக்குனர் ஆனேன். அதைத்தொடர்ந்து, சஞ்சு வெட்ஸ் கீதா, மைனா ஆகிய படங்களை கன்னடத் தில் இயக்கினேன். ‘அமர்’ படத்தின் மூலம் அம்பரீஷ்-சுமலதா தம்பதியின் மகன் அபிஷேக்கை கதாநாயகனாக அறிமுகம் செய்தேன். இதையடுத்து, ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமாக இருக்கிறேன். ப்ரீத்தம் திரைக் கதையை எழுத, விஜி வசனம் எழுதியிருக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுத, ஷபிர் இசையமைக்கிறார்.’’ என்று சொன்னார் அவர்.

வசூலில் சாதனை படைத்த இயக்குனர் நாகஷேகரின் கன்னடப் படம் ‘மைனா’, மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் ‘முதல் மழை’ என்ற பெயரில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், இப்புதிய தமிழ் திரைப்படத்துக்கான பூஜை நேற்று சென்னையில் கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்சியில் பாரதிராஜா, பாக்யராஜ், கலைப்புலி தாணு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு நாகஷேகரை வாழ்த்தினர்

Related posts

Leave a Comment

two − one =