சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோவில் நடை நாளை அடைப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை (ஆகஸ்டு 7-ந் தேதி) சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணம் நாளை இரவு 10.52 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.48 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாளை மாலை 4.30 மணி முதல் மறுநாள் (8-ந் தேதி) காலை 7 மணி வரை கோவிலில் உள்ள மகாதுவாரம் உள்பட அனைத்து நடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாச ராஜூ கூறுகையில், “நடைகள் மூடப்படும் நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாது. மேலும் லட்டு பிரசாதம், அன்னதான திட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்படும். இதையடுத்து 8-ந் தேதி காலை 5.30 மணி அளவில் நடை திறக்கப்படும். பக்தர்களின் தரிசனத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. நடை திறக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் வழக்கம்போல கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம். மேலும் நாளை கருட சேவை உட்பட எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது” என்று தெரிவித்தார்.
இதே போன்று தென் இந்தியாவில் உள்ள அனைத்து இந்து கோயில்களும் கிரகஹன காலத்தில் கோவில் நடை சாத்தப்பட்டு மறுநாள் காலை புண்ணியர்ச்சனை செய்த பிறகே பகதர்கள் தரிசனதிற்கென்று நடை திறக்கப்படும் என அந்தந்த கோவில் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன

Related posts

Leave a Comment