சந்திர கிரகணம்

நாளை ஹேவிளம்பி ஆடி மாதம் 22 (07.08.2017) திங்கட்கிழமை திருவோணம் நட்சத்திரத்தில் இரவு 10.51 மணி முதல் 12.48 வரை கேது கிரஹ்ஸ்த பகுதி சந்திர கிரகணம்

🕙ஆரம்பம் 10:51 இரவு
🕦மத்யமம் 11:50 இரவு
🕐முடிவு. 12:48 இரவு

நாளை மதியம் 12 மணிக்குள்  சாப்பாடு  முடித்து கொள்வது அவசியம் இதிலிருந்து குழந்தைகள், கர்பிணிப்பெண்கள், வயதானோர் நோயாளிகளுக்கு விலக்கு.

கர்ப்பிணிகள் கிரகண நேரத்தில் வெளியே வருவது, உன்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

கிரகண நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க கூடாது

ஜபம் செய்ய சிறப்பு

கிரகணம் ஆரம்பிக்கும் முன்பாக தர்ப்பை புல்லை வீட்டில் தலைவாசலில் செருகி வைக்கவும்

அடுத்த நாள் காலையில் தலைநீராடி, சுவாமி விக்ரம், படங்கள், பாடம்மற்றும் பூஜையறையை மஞ்சத்தூள் மூலம் சுத்தம் செய்து வீட்டையும் அலம்பிவிட்டு சுத்தம் செய்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்

தோசம் பெறும் நட்சத்திரங்கள்

உத்திராடம், திருவோணம், அவிட்டம், ரோகிணி, ஹஸ்தம்

இவர்கள் அடுத்த நாள் கோவிலுக்கு சென்று விநாயகர்,சந்திரன், கேது பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்து கொண்டு சாந்தி செய்து கொள்ளவும்

Related posts

Leave a Comment

seventeen + 16 =