இன்று சந்திர கிரஹணம்

இன்று சந்திர கிரஹணத்தன்று செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை பற்றி சில தகவல்கள்

க்ரஹணம் பற்றி சில குறிப்புகள்.
*************

1.ஸூர்ய க்ரஹணம் பிடிப்பதற்கு 4 ஜாமத்திற்கு முன் சாப்பிட வேண்டும்

2.சந்த்ர க்ரஹணம் பிடிப்பதற்கு 3 ஜாமத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

3.க்ரஹணம் பிடிக்கும் போது சமுத்திர கரையில் தீர்த்தாமாடலாம்(க்ரஹணம் விட்ட ஸ்நானம் ப்ரதமையாக இருந்தால் சமுத்திரத்தில் கூடாது)

4.பஹிஷ்டாஸ்த்ரீ ( வீட்டு விலக்கு இருப்பவர்கள் )கூட க்ரஹன ஸ்நானம் செய்ய வேண்டும்.

5.க்ரஹணம் காலத்தில் எல்லா தீர்த்தமும் கங்கைக்கு சமம்.
எல்லா ப்ராஹ்மணர்களும் வஸிட்டருக்கு சமம்.

6.க்ரஹணம் விடும் வரை தீபம் ஏற்றி வைக்க வேண்டும் மேலும் காயத்ரி ஜபம் செய்யணும்.

7. க்ரஹண காலத்தில் கர்ப்பிணிகள் வெளியில் வரக்கூடாது

8. க்ரஹணத்திற்கு முன் பக்வம் செய்த அன்னம் மீண்டும் பயன்படுத்த கூடாது.

9.க்ரஹணத்தில் ஜபம்/ தானம் அபரிமிதமான பலனை தரும்.

10.ஸூர்ய க்ரஹணத்தில் தர்ப்பணம் செய்த அன்று பலகாரம் பண்ண வேண்டாம்.

11.க்ரஹண தர்ப்பணம் மிக விசேஷமானது

12.சூர்ய க்ரஹணம் பிடித்த உடனேயும்/ சந்திர கிரகணம் பின் பாதியில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

13.சமுத்திர ஜலத்தில் பித்ரு தர்ப்பணம்செய்யலாம்,ஆனால் ஆசமனம் செய்ய கூடாது (தீர்த்தாமாடி மடியாக ஜலம் எடுத்துக் கொண்டு சென்று தான் ஆசமனம் செய்ய வேண்டும்.

குறிப்பு:
****

மீண்டும் பயன்படுத்த வேண்டியப்பொருள்களில் தர்ப்பயை சேர்க்கவும்.

கிரகண ஸ்லோகம்
*******

இந்த்ரோ நலோ,யமோ, ரக்ஷோ வருணோ வாயு ரேவச குபேர ஈஸோ நிக்நந்து உபராகோத்த வ்யதாம் மம ||

சந்திர க்ரஹணம்.
********

ஆகஸ்ட் 7 ம் தேதி (சூடாமணி) சந்த்ர க்ரஹண நாள்
ஆகஸ்ட் 7- 2017 திங்கட்கிழமை
சந்த்ர க்ரஹண ஆரம்ப காலம்
இரவு 22 .52 அதாவது பின் இரவு 10.52
க்ரஹணம் விட ஆரம்பிக்கும் நேரம்
இரவு 23.50 அதாவது பின் இரவு 11.50
க்ரஹண மோக்ஷம் மறுநாள் காலை 00.48
அதாவது ஆகஸ்ட் 8 ம் தேதி காலை 00.48
தர்ப்பணம் பண்ண வேண்டிய நேரம்
ஆகஸ்ட் 7 ம்தேதி பின்னிரவு 23.50 அதாவது பின் இரவு 11.50க்கு மேல் ஆகஸ்ட் 8 ம் தேதி 00.45 க்குள் காலை 00.45 க்குள்
தர்பணம் செய்பவர்கள் க்ரஹணம் பிடிக்கும் போதும் விட்ட பிறகும் ஸ்நானம் செய்ய வேண்டும்.

உத்ராடம் திருவோணம் அவிட்டம் ரோஹிணி ஹஸ்தம் இந்த நக்ஷத்ரத்தை உடையவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்
அனைவரும் க்ரஹண நேரத்தில் மந்த்ர ஜபம் செய்வது நல்லது அது 100 மடங்கு புண்யத்தை கொடுக்கக் கூடியது
திங்கட்கிழமையுடன் கூடிய பௌர்ணமியன்று க்ரஹணம் நேருவதால் இதற்க்கு சூடாமணி க்ரஹணம் என்று பெயர்
ஆகஸ்ட் 7 ம் தேதி திங்கட்கிழமை மத்யம் 12 மணிக்குள் போஜனம் செய்ய வேண்டும்
குழந்தைகளும் கர்ப்பிணிகளும் வ்யாதியஸ்தர்களும் க்ரஹணம் விட்ட பிறகு ஸ்நானம் செய்ய வேண்டும்
இக் கிரஹண புண்ய காலத்தில்
நதி ஸ்நானம் ஸமுத்ரஸ்நானம் தடாகஸ்நானம் மிக விசேஷம்.

பார்சுவ சந்திர கிரகணம்-07.08.2017
*************

7.8.2017 திங்கள்கிழமை இரவு 10.50 முதல் இரவு 12.48 வரை பார்சுவ சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகண நேரத்தில் மந்திர உபாசனை தொடங்குவது சித்தியடையும் என்பது சித்தர்கள் வாக்கு. எனவே இந்த அரிய காலத்தை மந்திர சித்தி வேண்டுவோர் பயன்படுத்தி பயன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

ஒம் ஜ்ம் க்லீம் சௌ: சக்திதராய

ஓங் நங் மங் சிங் வங் யங் லம்போதராய

ஹரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சுப்ரமண்யாய

சரவணோத் பவாய ஹிரண்யோத் பவாய

க்லீம் சர்வ வச்யாய

தன ஆக்ருஷ்ய தம் பம் ஹம் ஜூம்

ஷம் ஸம் அதிர்ஷ்ட தேவதாய

ஷண்முகாய சர்வதோஷ நிவாரணாய

சர்வ க்ரஹ தோஷ நிவாரணாய

சிவாய சிவதனயாய இஷ்டார்த்த

ப்ரதாய காய கம் கணபதயே க்லௌம்

ஷம் சரஹண பவாய வசி வசி

(ஸ்ரீ சுகப்பிரும்ம மகரிஷி அருளிய கணபதி மாலா சரவண மந்திரம்)

தினம் 9,18,36, முறையும் பௌர்ணமி நாளில் 16 முறையேனும் ஜெபித்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
அல்லது

ஓம் க்க்ருணி சூர்ய அதித்ய ஹ
என்ற சூர்ய மந்திரத்தை 1008 முறையும் தினம் 9, 27, 54, 108 எண்ணிக்கையில் உபாசனை செய்ய முகத்தில் தெய்வீக ஒளி, கண்பார்வை தீர்க்கமாகும்.
தீய சக்திகள் நெருங்காது,

பொண் பொருள் என்றுமே குறையாது

ஆண் வாரிசு இல்லாதவர்களுக்கு ஆண் வாரிசு உண்டாகும்

மூன்று லோகங்கலும் வசியமாகும்

கலியுகத்தில் விரைவில் பலன் தரும் மந்திரம்

Related posts

Leave a Comment

four × 4 =