கென்யாவில் இன்று ஜனாதிபதி தேர்தல்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான உஹூரு கென்யாட்டா (55), மீண்டும் ஜனாதிபதி ஆகும் பொருட்டு களமிறங்கியுள்ளார். ஜூப்ளி கட்சியின் தலைவரான அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (72) போட்டியிடுகிறார்.
Image result for kenya president 2017
கடந்த சில தினங்களாக நடைபெற்ற தீவிர பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வன்முறை ஏற்படாமல் இருக்க வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெறும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்போது, வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. எனவே மக்கள் கூடும் பகுதிகள் மற்றும் வன்முறை ஏற்படலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் ஏராளமான போலீசாரும், ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறைகளை தவிர்த்து அமைதியான முறையில் வாக்களிக்கும்படி நாட்டு மக்களை ஜனாதிபதி கென்யாட்டா கேட்டுக்கொண்டுள்ளார்.

2007-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப்பிறகு கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் போன்று நடந்த மிகப்பெரிய வன்முறையை மீண்டும் பார்க்க விரும்பவில்லை என பெரும்பாலான கென்யர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment