பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு – சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

நாடு முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகா பயிற்சியை கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யா மற்றும் டெல்லி பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ஜே சி சேத் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மாணவர்களின் நலன் காக்கும் விதமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அனைத்து பள்ளிகளுக்கும் இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ”பள்ளிகளில் என்ன கற்றுத்தர வேண்டும் என்பதை நம்மால் கூற முடியாது. அது எங்களுடைய வேலை இல்லை. நாம் எப்படி பள்ளிப்பாடத்திட்டத்தை வழிநடத்த முடியும்” என இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பி லோகுர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இம்மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி எம்.பி லோகுர் உத்தரவிட்டார்.

Related posts

Leave a Comment

17 + 9 =