பதவி தருவதால் சேரமாட்டோம் : கே பி முனுசாமி

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ இ அ தி மு க தற்சமயம் பல அணிகளாக பிரிந்து உள்ளது. அ இ அ தி மு கவிலிருந்து பிரிந்த ஓ பி எஸ் அணியை சேர்ந்த கே பி முனுசாமி தான் முதன்முதலில் சசிகலா குடும்பத்தினர் கட்சியையும் ஆட்சியையும் கபளீகரம் செய்ய முயற்சிக்கிறார்கள் அது ஒருபோதும் நடக்காது உண்மையான தொண்டர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வெளிப்படையாக கூறினார்.

பின்னர் ஓ பன்னீர் செல்வம் வெளியேறினார் அவருடன் எம் எல் ஏக்கள் சிலர் எம் பிக்கள் சிலர் என வெளியேறினர். ஜெயலலிதாவின் அன்னான் மகள் தீபா தனி கட்சி தொடங்குவதாக அறிவித்து பின்னர் அது செயலிழந்து போய்விட்டது. பொது செயலாளராக தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட சசிகலா சொத்து குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்பொழுது பெங்களுருவில் சேர்கையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்நிலையில் . டி டி வி தினகரன் துணை பொது செயலாளராக சசிகலாவால் அறிவிக்கப்பட்டு கட்சியில் பல குழப்பங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஓ பி எஸ் அணியும், எடப்பாடி அணியும் இணைய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓ பி எஸ் அணி சார்பில் வைக்கும் முக்கிய கோரிக்கை சசிகலா குடும்பத்தை சார்ந்த ஒருவரும் கட்சியிலோ, ஆட்சியிலோ இருக்கக்கூடாது என்பதே.

அதில் தற்பொழுது டி.டி.வி தினகரன் கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லை என்பதை நேற்றைய         அ.இ.அ.தி .மு.க  கட்சி கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முடிவெடுக்கப்பட்டது. இதனிடையே பிரிந்த அணிகளை ஒன்றுசேர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஓ.பி.எஸ்ஸை துணை முதல்வராகவும், அவரது அணியை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி தர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதை பற்றி திரு. கே.பி.முனுசாமியிடம் கேட்டதற்கு “துணை முதல்வர் பதவி தருகிறோம் என்று கூறுவதை   கேட்டு மட்டும் நாங்கள்  இணைய தயாராக இல்லை. எங்களின் முக்கியமான கோரிக்கையான சசிகலா குடும்பத்திலிருந்து ஒருவரை கூட ஆட்சியிலோ அல்லது கட்சியிலோ எந்த ஒரு பதவியும் வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக உறுதிமொழி அளித்தால் ஒழிய நாங்கள் இணைவதற்கான சாத்திய கூறுகளே இல்லை” என திட்டவட்டமாக கூறினார் .

இது பற்றி திரு.ஓ.பி.எஸ்ஸிடம் கேட்டபோது “இப்பொழுதான் பாதி வந்திருக்கிறார்கள் மீதியும் வரட்டும் பின்னர் பார்க்கலாம்” என கூறினார்.

Related posts

Leave a Comment

two + 1 =