பெரிய குழுமத்தில் அஜித்- விஜய் படங்கள்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் `விவேகம்’. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது முதல் படம் குறித்து ஒவ்வொரு நாளும் ருசீகரமான தகவல் வந்த வண்ணம் உள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

அதேபோல், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் `மெர்சல்’. தீபாவளியை ஒட்டி ரிலீசாக இருக்கும் இப்படத்தின் மீதும் ரசிகர்களிடையே அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த இரு படங்களின் தொலைக்காட்சி உரிமையை தமிழகத்தின் இருபெரும் நிறுவனங்கள் கைப்பற்றி இருக்கின்றன.

`விவேகம்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டி.வி.யும், `மெர்சல்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜி தமிழ் டி.வி.யும் கைப்ற்றியிருக்கிறது.

Related posts

Leave a Comment