அஜித் குமாரை புகழும் ஹாலிவுட் நடிகை

எந்த ஒரு பிரம்மாண்ட ஆக்க்ஷன் படத்தின் வெற்றிக்கும் பின்னால் அந்த படத்தின் பிரதான சக  நடிகர்கள் ஒரு முக்கிய பங்களிப்பர். ‘விவேகம்’ போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த சர்வதேச உளவு படத்திற்கு சக நடிகர்கள் மேலும் முக்கியமானவர் ஆவார்கள் . அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிப்பில், சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ ஆகஸ்ட் 24 அன்று உலகம் முழுவதும் மிக பெரிய அளவில் ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தில் அஜித் குமாரின் ‘கவுண்டர் டெரரிஸ்ட் ஸ்க்வாட்’ அணியின் ஒரு அங்கமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக் [ Amila Terzimehic ] .

இது குறித்து அமிலா டெர்ஜிமெஹிக்  பேசுகையில்,              ” ‘விவேகம்’ போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த சர்வதேச படத்தின் மூலம் இந்திய சினிமாவில் நான் கால் பதிப்பது எனக்கு பெரிய பெருமை. இந்த வாய்ப்பினை எனக்களித்த  இயக்குனர் சிவாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஹோலிவுட்டின் உச்ச நட்சத்திரம் பியர்ஸ் பிராஸ்னன் கதாநாயகனாக நடித்த ‘தி நவம்பர் மேன்’ படத்தில் நான் செய்திருந்த கதாபாத்திரத்தை பார்த்த இயக்குனர் சிவா ‘விவேகம்’ பட வாய்ப்பினை எனக்களித்தார்  என அறிந்தேன். விவேகத்தில் எனது நடிப்பு மட்டுமின்றி ஆக்ஷன் காட்சிகளில் கடின சண்டை போடும் திறனும் தேவைப்பட்டது .ஆக்ஷன் படங்களின் ரசிகையாக எனக்கு இயக்குனர் சிவா கூறிய ‘விவேகம்’ படத்தின்  கதையும், அதில்  எனது கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது. அஜித் குமாரை முதல் முறையாக சந்திப்பதற்கு முன்னரே அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பதை தெரிந்துகொண்டேன். ஆனால் சந்தித்தபொழுது துளி கூட தலைக்கனம்  இல்லாமல் அவ்வளவு எளிமையான மனிதராக எல்லோருடனும் பழகினார்.

Image result for vivegam images

அவருடைய தொழில் பக்தி நான் இதுவரை வேறெந்த நடிகரிடமும் பார்த்ததில்லை. எல்லா ஆபத்தான சண்டை கட்சியையும் டூப் வேண்டாம் என்று தானே செய்து அசத்தினார். இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இன்னமும் அவரது கண்களில் ஒரு சிறுவனின் துள்ளலும்  பாசிட்டிவிட்டியும்    உள்ளது . எனது சினிமா வாழ்க்கையும் இந்த உலகத்தையும் அவரது கண்ணோட்டத்திலேயே கண்டு வாழ விரும்புகிறேன். மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அவருக்கு நிகர் அவரே. ‘விவேகம்’ படத்தின் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த தொழில் பக்தியுடன் பெரிய அளவில் உண்மையாக  உழைத்ததுள்ளனர்.  இந்திய சினிமா ரசிகர்கள் ‘விவேகம்’ படத்தை நிச்சயம் மாபெரும் வகையில் ரசித்து கொண்டாடுவார்கள் என உறுதியாக சொல்லுவேன்.” என்றார்.

Related posts

Leave a Comment

nineteen + 19 =