சென்சார் போர்டு உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவராக 2015ம் ஆண்டு பஹ்லாஜ் நிஹலானி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணி செய்து வந்த பஹ்லாஜ் நிஹலானி மீது இந்தித் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கக் கெடுபிடி செய்ததாகப் புகார் எழுந்தது.

இந்நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பஹ்லாஜ் நிஹலானி இன்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பிரபல பாடலாசிரியர் பரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட உள்ளார். நிஹலானியின் 3 ஆண்டு பதவி காலம் வருகின்ற ஜனவரி மாதத்துடன் நிறைவு பெறவுள்ளது.

Image result for actress vidya balan

Image result for actress jeevitha rajasekhar

மேலும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு புதிய உறுப்பினர்களையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகைகள்  கவுதமி,  வித்யா பாலன், ஜீவிதா ராஜசேகர் ஆகியோர் தணிக்கைத் துறையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிற உறுப்பினர்கள்:

நரேந்திர கோஹ்லி

நரேஷ் சந்திரா லால்

நீல் ஹெல்பேர்ட் நான்க்ரிஹ்

விவேக் அக்னிஹோத்ரி

வாமன் கென்றே

T.S. நாகபரனா

ரமேஷ் பதங்

வாணி திரிபாதி டைக்கூ

ஜீவிதா ராஜசேகர்

மிஹிர் புட்ட

நடிகை கவுதமி சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

Leave a Comment