சசிகலா நியமனம் செல்லாது தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். அணி மனு

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தனித்து செயல்படத் தொடங்கி உள்ளனர். அத்துடன், கட்சிப் பணியில் தான் செயல்படுவதை யாராலும் தடுக்க முடியாது என டிடிவி தினகரனும் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கே.பி. முனுசாமி, செம்மலை, மாபா பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் அகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். சசிகலா நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும், பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்ததனர்.

தினகரன் துணை பொதுச்செயலாளராக பதவி வகிக்க இயலாது என்ற தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

Related posts

Leave a Comment

five × five =