அசாமில் காந்தி சிலை அகற்ற முடிவு: சமூக ஆர்வலர்கள் கண்டனம்

அசாம் மாநிலத்தில் மகாத்மா காந்தியின் சிலையை அகற்றும் கவுகாத்தி நிர்வாகத்தின் முடிவுக்கு அம்மாநில கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அசாம் மாநிலம் கவுகாத்தி மாவட்டத்தில் உள்ள சரினியா மலையில் காந்தி மண்டப தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ராம்கிந்தார் வடிவமைத்த மகாத்மா காந்தியின் சிலையை அங்கிருந்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. துணை கமிஷனர் தலைமையில் கடந்த திங்கட்கிழமை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.சிலை காந்தியின் உருவத்தை போன்று இல்லை என்பதால் அகற்றப் போவதாக கூறி கவுகாத்தி மாவட்ட நிர்வாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் சிலையை அகற்றும் கவுகாத்தி நிர்வாகத்தின் முடிவுக்கு அம்மாநில கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.தற்கால கலை பற்றிய புரிதல் இல்லாமை தான் இந்த முடிவுக்கு காரணம் என்று கலைஞர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒரு சிலை என்பது அப்படியே தத்ரூபமாக இருக்க வேண்டிய அவசியமில்லை கலைஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

Related posts

Leave a Comment

5 × one =