காவிரியில் புஷ்கர் விழா

Related image

குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்பொழுது அந்த ராசிக்கு உரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படும் கடந்த 2015 ஆம் ஆண்டு குருபெயர்ச்சியின் பொழுது ஆந்திர மாநிலம் கோதாவரியில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டது நிகழும் 2017 ஆம் ஆண்டில் குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர இருப்பதால் துலாம் ராசிக்கு உரிய நதியான காவிரியில் புஷ்கர விழா கொண்டாடப்பட உள்ளது.144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டத்தில் இந்த விழா நடைபெறும் என்பதால் இதனை மகா புஷ்கர திருவிழா என்றும் வழங்குவர்.வரும் 12-09-2017 (செப்டம்பர் 12) முதல் 24-09-2017 (செப்டம்பர் 24) வரை கொண்டாடப்பட இருக்கும் இந்த மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழாவுக்காக 10 குதிரைத்திறன் கொண்ட போர்வெல் அமைக்கவும் ,பாதுகாக்கப்பட்ட குடிநீர் ,கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த துலாக்கட்ட மகா புஷ்கர விழாவில் கலந்துகொண்டு நீராட நாடு முழுவதிலும் இருந்து ஆதீனங்கள் ,பீடாதிபதிகள் ,பக்தர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் மயிலாடுதுறைக்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இதற்கு பிறகு இந்த விழாவானது 2161 ஆம் ஆண்டில் தான் நடைபெறும்.

Related posts

Leave a Comment

9 − 5 =