ஏர் இந்தியா விமானங்களில் இனி முப்படை வீரர்களுக்கு முன்னுரிமை

நாடு முழுவதும் 71-வது சுதந்திர தினம் நேற்று கோலாகமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின நாளில் ஏர் இந்தியா நிறுவனம் ஒரு இனிப்பான திட்டத்தை தொடங்கியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களில் ஏறுவதற்கு தரைப்படை, கப்பல் படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதே இந்த திட்டம் ஆகும்.
Image result for air india flight
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் சேர்மன் அஸ்வானி லோஹனி கூறுகையில், இந்த அறிவிப்பு மூலம் நுழைவாயில்களில் பாதுகாப்பு படை வீரர்களே உள்ளே செல்ல முதலில் அழைக்கப்படுவார்கள். முதல்வகுப்பு மற்றும் பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கு முன்பாக வீரர்கள் அழைக்கப்படுவார்கள்.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த பைலட் கூறுகையில், “அமெரிக்க விமான நிலையங்களில் சொகுசு இருக்கைகள் கொண்ட இருக்கைகள் அறைகளில் அமர ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். இந்திய விமான நிலையங்களில் இந்த அறைகளில் அரசியல்வாதிகளே நிரம்பியுள்ளனர். அவர்கள் அமெரிக்க விமானங்களில் நடைபெறுவதை கருத்தில் கொண்டு நமது ராணுவ வீரர்களுக்கும் இடம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ராணுவ வீரர்களுக்காக உள்நாட்டு பயணக் கட்டணத்தில் ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் சலுகை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment

18 + 15 =