நடிகர் ‘அல்வா’ வாசு கவலைக்கிடம்

இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர நடிகரானார். `அமைதிப்படை’, ரஜினிகாந்தின் `அருணாச்சலம்’, `சிவாஜி’, நடிகர் சத்யராஜ் உள்பட பல நடிகர்களின் படங்களில் இவர் நடித்த காட்சிகள் பிரபலம்.

சில மாதங்களுக்கு முன்பு அல்வா வாசு கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 6 மாதங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவருக்கு அளித்த சிகிச்சையால் பலன் கிடைக்கவில்லை.

அவர் உயிரை காப்பாற்றுவது கடினம். எனவே அவரை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்று டாக்டர்கள் இன்று கூறினர். இதனால் அவரது குடும்பத்தினர் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த சாப்ளின் பாலு சிங்கமுத்து போண்டா மணி உள்ளிட்ட ‘அல்வா’ வாசுவுக்கு நெருங்கிய நண்பர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறார்கள். பெரிய நாயகர்கள் அவருக்கு உதவினால் காலத்தினால் செய்த உதவியாக இருக்கும்

நடிகர் அல்வா வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும், ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.

Related posts

Leave a Comment

1 × 3 =