நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு ஓராண்டு விலக்கு

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவு தேர்வில் (நீட்) தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க கோரி அவசர சட்ட முன்வடிவை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

Related image
இந்த சட்ட முன்வடிவு தொடர்பாக அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபாலிடம் மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது.

நேற்று  பிற்பகல் கிடைத்த தகவல்களின்படி தமிழக அரசின் சட்ட முன்வரைவை ஆதரித்து மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கே.கே.வேணுகோபால் குறிப்பு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று மாலைக்குள்   நீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும். இந்த முடிவு தமிழக அரசு கோரிக்கைக்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அவசர சட்டத்தை அனுப்பி வைக்கும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் தமிழக மாணவ-மாணவிகளுக்கு கல்வியாண்டு 2017-2018-ல்  நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment

five × 2 =