இன்றைய ராசிபலன் 18/08/2017

மேஷம்
இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். குடும்ப கடமைகளில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் புறக்கணித்தால் மோசமான விளைவு ஏற்படும். உங்கள் நிலையை துணைவர் புரிந்து கொள்ளும்படி செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். நீங்கள் செய்யாததை மற்றவர்களை செய்யச் சொல்லி வற்புறுத்தாதிருக்க முயற்சியுங்கள். போட்டியிடும் இயல்பு எந்தவொரு போட்டியிலும் உங்களை வெற்றி பெறச் செய்யும். திருமண வாழ்வில் அதிக எதிர்பார்ப்பு இருந்தால் இன்று ஏமாற்றம் ஏற்படலாம்.

*அதிர்ஷ்ட எண்: 3 *

ரிஷபம்
துறவு நிலையில் உள்ள ஒருவரின் தெய்வீக சிந்தனை உங்களுக்கு ஆறுதலையும் சவுகரியத்தையும் கொடுக்கும். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் – ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் பட்டியலை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். கிரியேட்டிவ் இயல்பு கொண்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணை கொடுக்கும் இன்ப அதிர்ச்சியில் இன்று நீங்கள் குஷியாகிவிடுவீர்கள்.

*அதிர்ஷ்ட எண்: 2 *

மிதுனம்

நண்பரை தவறாகப் புரிந்து கொள்வதால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம் – எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு சமமாக விசாரிக்கவும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். பிறருடன் வாக்குவாதங்கள், மோதல்கள், தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவிர்த்திடுங்கள். உங்கள் அழைப்பை இழுத்தடித்து பார்ட்னரை வெறுப்பேற்றுவீர்கள். நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை வேறொருவர் பெற அனுமதிக்காதீர்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. உங்கள் துணையின் பேச்சால் இன்று கோபமடைய கூடும். ஆனால் உங்கள் துணைவர்/துணைவி அதனை தன் அன்பால் சரி செய்து விடுவார்.

*அதிர்ஷ்ட எண்: 9 *

கடகம்

இன்று களைப்பாக உணர்வீர்கள். சிறிய விஷயங்களுக்கு அப்செட் ஆவீர்கள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். நீங்கள் அக்கறை காட்டக் கூடியவருடன் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். காதல் விவகாரங்களில் நாவைக் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். இன்று கடினமான நாள். ஆனால் பொறுமயுடனும் நிதானத்துடனும் செயல்பட்டால் தடைகளை தாண்டி வெற்றி பெறலாம். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். உங்கள் துணை இன்று மோசமான மூடில் இருப்பது போல் தெரிகிறது.

*அதிர்ஷ்ட எண்: 4 *

சிம்மம்

ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். குடும்பத்தினருடன் ரிலாக்ஸான நேரத்தை செலவிடுங்கள். இந்த நாள் உங்களுக்கு ரோஜாக்களின் நறுமணத்தை வழங்கும். காதலின் அற்புதத்தை உணர்ந்து மகிழுங்கள். உங்கள் பாஸ் இன்று மிக மோசமான மூடில் வரலாம் எனவே அதை நீங்கள் சமாளிப்பது கடினமாக இருக்கும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. அன்பான தொடுதல், முத்தங்கள், அணைப்பு ஆகியவை இனிமையான திருமண வாழ்வில் அத்தயாவசிய விஷயங்களாகும். இவை அனைத்தையும் நீங்கள் இன்று உணர்வீர்கள்.

*அதிர்ஷ்ட எண்: 2 *

கன்னி

உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த கஷ்டப்படுவீர்கள் – வழக்கத்துக்கு மாறான நடத்தையால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் குழப்பமாகி வெறுப்படைவார்கள். பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். குழந்தையின் உடல்நலக் குறைவு உங்களை பிசியாக வைத்திருக்கும். நீங்கள் உடனடியாக கவனிக்க வேண்டியிருக்கும். சரியான அறிவுறை பெற்றிடுங்கள். நீங்கள் சற்று அலட்சியமாக இருந்தாலும் நிலைமை மோசமாகிவிடும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். இன்று மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் கடைசியில் ஆதாயம் தருபவையாக இருக்கும். ஆனால் பார்ட்னர்களின் எதிர்ப்பை சந்திப்பீர்கள். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். உங்கள் மண வாழ்வில் இனிமையை கூட்டும் சிறந்த நாள் இது.

*அதிர்ஷ்ட எண்: 1 *

துலாம்

உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். குழந்தையின் படிப்பைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இப்போது உங்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் இவை தற்காலிகமானவை. காலப்போக்கில் இவை மறைந்துவிடும். இன்று காதலில் விழுவது கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருங்கள். மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள். ஆனால் நீங்கள் வேலை செய்வதாக இருந்தால் உங்கள் பிசினஸ் டீலிங்கில் கவனமாகப் பார்க்க வேண்டும். பயணத்தில் புதிய இடங்களை பார்ப்பீர்கள், முக்கியமானவர்களை சந்திப்பீர்கள். இன்று படுக்கையறையில் உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ காயம் ஏற்படலாம். எனவே மென்மையாக அணுகவும்.

*அதிர்ஷ்ட எண்: 3 *

விருச்சிகம்

சில விளையாட்டுகள் விளையாடுவதில் ஈடுபாடு காட்டுங்கள். அதுதான் நீடித்த இளமையின் ரகசியம். முதலீடுகள் செய்து ஊகங்களுக்குப் போக இது நல்ல நாள் அல்ல. உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நிதி மற்றும் வீட்டில் அசவுகரியத்தை ஏற்படுத்துவதில் வரம்பு மீறி செயல்படுவார். உங்கள் அன்புக்குரியவருக்கு உங்களின் நீடித்த காதல் ஆறு போல இருக்கும். இன்று உங்கள் போனை பக்கத்தில் வைத்துவிட்டு வேலை செய்யாவிட்டால் தவறுகள் நேரக்கூடும். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.

*அதிர்ஷ்ட எண்: 5 *

தனுசு

ரிலாக்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கும் நாள். உங்கள் தசைகளுக்கு நிவாரணம் தருவதற்கு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யுங்கள். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவரை புறக்கணித்தால் உறவு பாதிக்கப்படலாம். அவருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியான பொன்னான நாட்களின் நினைவுகளை திரும்பக் கொண்டு வாருங்கள். உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் காதலை பகிர்ந்தால் இன்று உங்கள் அவர் உங்கள் தேவதையாக மாறுவார். உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு பார்ட்னரை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய – நிறைய பிரச்சினைகள் இருக்கும். உங்களுக்கும் துணைவருக்கும் இடையில் நிச்சயமாக நம்பிக்கை குறைவு ஏற்படும். இது திருமணத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.

*அதிர்ஷ்ட எண்: 2 *

மகரம்

நீங்கள் நீண்ட பயணத்துக்கு திட்டமிடுவதால், ஆரோக்கியமும், சக்தியை செலவிடாத குணமும் அதிக பயன் தரும். பிசியான பணி அட்டவணையிலும் நீங்கள் களைப்பை எளிதில் சமாளித்துவிடுவீர்கள். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். உறவினர்களுடன் செலவிடும் நேரம் உங்களுக்கு சாதகமாக அமையும். நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். வேலையை பொறுத்த வரையில் இன்று எந்த ப்ரச்சனையுமின்றி இனிமையாக இருக்கும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று, மனதுக்கினியவருடன் பொழுதை கழிப்பது எத்தனை இன்பமானது என்பதை அறிவீர்கள்.

*அதிர்ஷ்ட எண்: 2 *

கும்பம்

வண்டி ஓட்டும் போது கவனமாக இருங்கள். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் மூலமாக முக்கியமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். காதலுக்கு உரியவர் வெறுத்தாலும் உங்கள் காதலைக் காட்டுங்கள். இன்று ஆபீசில் ஒரு நல்ல மற்றம் உருவாகக்கூடும். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் உங்கள் வேலை பளுவினால் தன்னை உதாசீனப்படுத்துவதாக உங்கள் துணை நினைக்க கூடும். இதனால் உங்கல் துணைவர்/ துணைவி மாலையில் வேதனையுடன் காணப்படுவார்.

*அதிர்ஷ்ட எண்: 9*

மீனம்

உங்களின் பர்சனாலிட்டி வாசனை திரவியம் போல இன்று செயல்படும். செலவுகள் அதிகமாகும், ஆனால்yg வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். சமூக நிகழ்ச்சிகள் ஜாலியாக இருக்கும். ஆனால் மற்றவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சிறிய பிரச்சினைக்கு கூட உங்கள் டார்லிங்குடன் உறவில் பிரச்சினை எழக்கூடும். இவ்வளவு நால் நீங்கள் எந்த வேலையை செய்ய வேண்டமென இத்தனை நாள் தட்டிக் கழித்து வந்தீர்களோ அதனை இன்று செய்ய நேரும். உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள் – உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். இன்று உங்கள் துணை தனது இனிமையான பக்கத்தை காட்டுவார்.

அதிர்ஷ்ட எண்: 6

Related posts

Leave a Comment

20 − seven =