இன்றைய ராசிபலன்கள் 19/08/2017

💥 மேஷம்
வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், வாழ்வில் அக்கறை காட்டுவதே உண்மையான சவால் என உணருங்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஒருதலை மோகம் உங்கள் மகிழ்ச்சியை அழிக்கும். நன்பர்களுடன் உரையாடுவது முக்கியம் தான் ஆனால் இன்று உங்கள் ஸ்டேடசை “பிசி” என்று மாற்றிவிடுங்கள் ஏனென்றால் இன்று ஆபிசில் மிக பிசியான நாள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று, நீங்கள் உங்கள் துணையுடன் ஏற்பட்ட சண்டையினால் திருமண வாழ்க்கை பலவீனமடைந்ததை போல உணரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 6

ரிஷபம்
பல் வலி அல்லது வயிற்று வலி உங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உடனடி நிவாராணத்துக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் – அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். உங்கள் நண்பரின் உதவியை நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் நேரத்தில் அவர் கைவிட்டுவிடக் கூடும். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். ஏனென்றால் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் துணையின் உடல் நல பாதிப்பால் நீங்கள் ஒருவரை சந்திக்க எண்ணியிருந்த திட்டம் பாதிக்கும். ஆனால் இதன் மூலம் உங்கள் துணையுடன் இனிமையாக நேரத்தை செலவிட முடியும்.

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம்
ஒரு நண்பருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு முன்கோபத்தை ஏற்படுத்தும். தேவையற்ற டென்சனைத் தவிர்க்க, உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்தால், இன்று நிதியிழப்பு வரும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, மற்ற எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். உடன் யாரும் இல்லாவிட்டால் – உங்கள் புன்னகைக்கு அர்த்தம் கிையாது – சிரிப்புக்கு சப்தம் இல்லை சிலருக்கு தொழில் முன்னேற்றம் கிடைக்கும். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. இன்று உங்கள் திருமண வாழ்வுஇல் சிறிது சலிப்பு ஏற்படலாம். அதனை ஸ்வாரஸ்யமானதாக மாற்றுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 3

கடகம்
இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். வீட்டில் நிலவும் சூழ்நிலையால் நீங்கள் அப்செட் ஆகலாம். உங்கள் காதல் வாழ்க்கையின் இனிமையான நாளிது. காதலித்து மகிழுங்கள். புதியவற்றைக் கற்றுக் கொள்ளும் உங்கள் ஆர்வம் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால் – மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். உங்கள் அருமையான துணையின் அன்பான அரவணைப்பை இன்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம்
தேவையில்லாத சிந்தனைகள் மனதில் நிரம்பியிருக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். ஏனெனில் வேலையில்லாதிருக்கும் மூளைதான் பிசாசின் வேலையிடமாக இருக்கிறது. இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். குடும்பத்தினருடன் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதன் மூலம் உங்கள் லட்சியங்களை எளிதில் அடைவீர்கள். உங்கள் காதலுக்கு எதிர்ப்பு எழக்கூடும். இன்று உங்கள் எல்லோருக்கும் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அதிக சோஷியலான நாள் – உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். உங்கள் வாயைத் திறந்து என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் துணைவர்/துணைவி நீங்கள் அவரிடம் எதொ ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைத்த்தால் கோபமடையலாம்.

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி
உங்கள் முகத்தில் புன்னகை நீங்காத நாள். புதியவர்கள் கூட தெரிந்தவர்கள் போல தோன்றுவர். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் காட்ட வேண்டும். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இன்று உங்கள் திருமண வாழ்வில் மிகவும் சாதகமான நாள்.

அதிர்ஷ்ட எண்: 3

துலாம்
அளவுக்கு அதிகமான பயணம் ஆத்திரத்தை ஏற்படுத்தும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தில் புதிய உறுப்பினரின் வருகை உங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும். அதை எதிர்பார்த்து ஒரு பார்ட்டி வைத்து கொண்டாடுங்கள். இன்ட்ரஸ்டிங்கான ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. பெற்றோரை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். இன்று நீங்கள் ஒரு இனிமையான சர்ப்ரைசை உங்கள் திருமண வாழ்வில் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம்
இன்றைக்கு ஆரோக்கியம் பூரணமாக இருக்காது. இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். உங்கள் பணத்தைக் கையாள உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுமதிக்காதீர்கள் அல்லது நீங்கள் உங்கள் சீக்கிரத்திலேயே பட்ஜெட்டை தாண்டிவிடுவீர்கள். உங்கள் காதல் வாழ்வில் திருமண திட்டம் நீண்டகால பந்தத்திற்கு வழிவகுக்கும். இன்று, நீங்கள் இதுவரை ஆபீசில் உங்கள் எதிரியாக நினைத்த ஒருவர் உண்மையில் உங்கள் நலம் விரும்பி என்பதை தெரிந்து கொள்வீர்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். வீனஸ் போன்றவர்கள் பெண்கள் மார்ஸ் போன்றவர்கள் ஆண்கள். ஆனால் இன்று வீனசும் மார்சும் ஒருவருள் ஒருவர் கரைந்து உருகும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 7

தனுசு
உங்களின் அன்புமிக்க இயல்பால் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். உங்களின் கூடுதல் தாராள நடத்தையை உறவினர்கள் அதிகமாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பார்கள். உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஏமாற்றப்படுவீர்கள். ஓரளவுக்கு தாராள மனது நல்லது னால் அது வரம்பு மீறினால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வீட்டில் பிரச்சினைகள் எழக் கூடும் – ஆனால் சிறிய விஷயங்களுக்காக துணைவரை குறைசொல்வதைத் தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் காதல் வாழ்வில் ஒரு இனிமையான திருப்பத்தை சந்திப்பீர்கள். காதல் வசப்பட்டு சொர்கத்தில் மிதக்கும் உணர்வை பெறும் நாளிது. உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். இன்று நாள் நல்ல முறையில் செல்ல வேண்டும் என்றால் உங்கள் துணை மூட் அவுட் ஆக இருக்கும் போது மௌனம் காப்பது சிறந்தது.

அதிர்ஷ்ட எண்: 4

மகரம்
நண்பரின் ஸ்பெஷல் பாராட்டு உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். மற்றவர்கள் வெயிலில் நின்று காய்ந்து கொண்டிருக்கும்போது நிழல் தரும் மரங்களைப் போல இருக்க உங்கள் வாழ்வை நீங்கள் ஆக்கிக் கொண்டதே இதற்குக் காரணம். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் – முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்பட காரணமாக இருக்கலாம். காதல் விவகாரத்தில் அடிமையைப் போல இருக்காதீர்கள். போட்டித் தேர்வுக்கு செல்பவர்கள் அமைதியாக இருக்கவும். தேர்வு பயம் உங்களை பதற்றமாக்கிவிடக் கூடாது. உங்களின் முயற்சிக்கு நிச்சயமாக பாசிடிவான ரிசல்ட் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் அண்டை வீட்டுகார்ர்களுங்கள் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஆனால் உங்கள் பந்தத்தை அசைக்க முடியாது.

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம்
மந்தமாகி மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடாதீர்கள். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். தூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத தகவல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். உங்கள் அன்புக்குரியவர் இல்லாததால் மனம் ஏங்கும். வேலையில் கவனம் செலுத்தி, உணர்ச்சிகரமான மோதல்களில் இருந்து தள்ளியே இருங்கள். உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள் – உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். இந்த நாள் உங்கள் பொறுமயை சோதிக்கும் வகையில் இருக்கு, எனவே ஆபீசில் நிதானத்துடன் செயல்படுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 2

மீனம்
அசாதாரணமான சிலதை நீங்கள் செய்ய உங்கள் ஆரோக்கியம் இடம் தரும் என்பதால் விசேஷமான நாள். எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும். பிள்ளைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் தேவைப்படும். ஒருவருடைய தலையீடு காரணமாக உங்கள் மனதிற்கினியவருடன் உறவு பாதிக்கப்படலாம். தீடீரென ஆபீசில் உங்கள் எனர்ஜி குறைந்தது போல தோன்றலாம். இதனால் உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். உறவினரால் உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 9

Related posts

Leave a Comment

7 + 4 =