அ.தி.மு.க. அணிகள் ஓரிரு நாட்களில் இணையும்: ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்து விடும் என்ற எதிர்பார்ப்பு நேற்று காலை தொடங்கி இரவு 9 மணி வரை பரபரப்பாக நீடித்தது.

இரு அணி தொண்டர்களும் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் திரண்டிருந்த நிலையில் திடீரென இரு அணி இணைப்பு முயற்சியில் சமரசம் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியானது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் அளவுகடந்த ஏமாற்றத்துக்கும், விரக்திக்கும் உள்ளானார்கள்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் 2-வது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டார். மதியம் 1 மணிக்கு இந்த ஆலோசனை முடிந்தது. அதன் பிறகு 1.15 மணிக்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. அணிகள் இணைப்பதை பற்றிய பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படும்.

அ.தி.மு.க. அணிகளுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. அ.தி.மு.க.வை காப்பற்றவும் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா ஆகியோர் காட்டிய அரசியல் பாதையில் தொடரவும் இணைப்பு திட்டமிட்டப்படி நடைபெறும்.

தமிழக மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் அ.தி.மு.க. அணிகள் இணைவதை எதிர்பார்க்கிறார்கள். அந்த விருப்பம் நிறைவேறும். விரைவில் நல்ல முடிவை நீங்கள் எதிர்பார்க்கலாம் என  ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அ.தி.மு.க. அணிகள் நாளைக்குள் இணைந்து விடும்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

வேலூர் கோட்டை மைதானத்தில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரும் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, நூற்றாண்டு விழா நடைபெறும் கோட்டை மைதானத்தில் கால்கோள் எனப்படும் பந்தக்கால் நடும் விழா இன்று நடந்தது.

இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார், கே.சி.வீரமணி, நீலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆம்பூர் பால சுப்பிரமணியம், சோளிங்கர் என்.ஜி. பார்த்திபன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. அணிகள் நாளைக்குள் இணைந்து விடும். அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிக்கும். மக்கள் அன்பை பெறவே அணிகள் இணைக்கப்படுகிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றது வரவேற்கதக்கது. நாங்கள் அவர்களை எதிராளிகளாக பார்க்க வில்லை என்றார்.

Related posts

Leave a Comment

seven − 4 =