இன்றைய ராசிபலன்கள் 21/08/2017

மேஷம்
நீங்களாக மருந்து சாப்பிடாதீர்கள், மருந்தை சார்ந்திருக்கும் தன்மை அதிகரித்துவிடும். பணம் பண்ண புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். உங்கள் சந்ததிக்காக திட்டமிட அருமையான நாள் தன் வாழ்வைவிட ுங்களை அதிகம் நேசிக்கும் நபரை சந்திப்பீர்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு விஷத்தை ஸ்பெஷலாக செய்வார்.

அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம்
இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். ஆனால் அதேசமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் – முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். இது ஆதிக்கம் செலுத்துவதற்கு அல்லது சில பிரச்சினைகளை ஆரம்பிக்கும் வேலையை செய்வதற்கான நாள் அல்ல. ரொமாண்டிக்கான சிக்கல் எழுந்து மகிழ்ச்சிக்கு கூடுதல் சுவை சேர்க்கும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இன்று, உங்களது துணையுடன் உங்கள் வாழ்கையிலேயே மிகவும் இன்பமாக பொழுதை செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம்
உங்கள் வெறுப்பைக் கொல்வதற்கு நல்லிணக்கமான இயல்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அன்பைவிட அதிக சக்திவாய்ந்தது, உடலை மிக மோசமாக பாதிக்கக் கூடியது. நல்லதைவிட கெட்டதுதான் வேகமாக வெற்றி பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களின் கிரியேட்டிவ் திறமையை நன்கு பயன்படுத்தினால் அதிக வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தரும் நல்ல அறிவுரை இன்று உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஒரு நல்லதை செய்யும்போது காதல் வாழ்க்கையில் நல்ல வகையில் திருப்பம் ஏற்படும். பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள் – உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். இன்று உங்கள் திருமண வாழ்க்கை எத்தனை இனிமையானது என்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

கடகம்
நல்ல பலன்களைப் பெறுவதற்கு முதியவர்கள் தங்கள் கூடுதல் சக்தியை பாசிடிவாக பயன்படுத்த வேண்டும். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் முக்கியமான மாற்றம் வரும். அது உங்களுக்கும், ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் குதூகலமாக அமையும். கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடனேயே செலவிடுவீர்கள். அது மிக இனிமையான பொழுதாக இருக்கம்

அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம்
உங்களின் கடுமையான நடத்தையால் மனைவியுடன் உறவு பாதிக்கப்படலாம். அல்பமாக எதையாவது செய்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை யோசியுங்கள். முடியுமானால் வெளியில் சென்று மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். உங்களுடன் வாழ்பவர் உள்ளுடன் மிக்க மகிழ்ச்சியாக இருக்க மாட்டார் – அவரை திருப்திப்படுத்த நீங்கள் என்ன செய்தாலும் மகிழ்ந்திட மாட்டார். ரொமான்ஸ் பாதிக்கும். உங்களின் மதிப்புமிக்க பரிசுகள் / அன்பளிப்புகளாலும் இன்று எந்த மேஜிக்கும் செய்ய முடியாது. பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். உங்களது சில வேலைகள் உங்கள் துணையின் உடல் நல கோளாறால் தடை படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி
உங்களை சாந்தமாக வைத்திருக்க உதவும் செயல்களில் ஈடுபாடு காட்டுங்கள். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் – எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்குவதற்கு நல்ல நாள் உங்கள் அன்புக்குரியவரின் கைகளில் சவுகரியம் – ஆனந்தம் உச்சகட்ட உற்சாகத்தைக் காண்பதால் – உங்கள் வேலை பின்னுக்குத் தள்ளப்படும். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட எண்: 8

துலாம்
மது அருந்தாதீர்கள். அது உங்கள் தூக்கத்தைக் கெடுத்து, ஆழ்ந்த ஓய்வையும் பாதிக்கும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். தேவையில்லாமல் மற்றவர்களிடம் குறை காணும் போக்கை உறவினர்கள் குற்றம் சொல்வார்கள். அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நீங்கள் உணர்ந்திட வேண்டும். இதனால் உங்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. குணத்தை மாற்றிக் கொள்வது நல்லது. உண்மையான காதலை நீங்கள் இன்று உணருவீர்கள். அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. மழைக்கும் ரொமான்ஸுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அது போல உங்கள் வாழ்கை துணையின் அன்பு மழையில் இன்று நீங்கள் நனைந்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம்
உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் பட்டியலை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நாளின் முடிவில் உங்களுக்காக அவர் ஏதோ ப்ளான் செய்து வருகிறார் என தெரிய வரும்.

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு
உங்கள் உணவில் முறையான அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரேன் தலைவலி நோயாளிகள் மதிய உணவை தவறவிடக் கூடாது. இல்லாவிட்டால் தேவையில்லாமல் உணர்ச்சிபூர்வ அழுத்தம் ஏற்படும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். பழைய நண்பர் ஒருவர் எதிர்பாராமல் வருகை தந்து, பழைய மகிழ்வான நினைவுகளை புதுப்பிப்பார். இன்று உங்கள் டார்லிங்கின் மனநிலை ஊசலாட்டத்தில் இருப்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். உங்கள் துணை சிறிது வித்யாசமாக இன்று நடந்து கொள்வார். அதனால் பொறுமை அவசியம்.

அதிர்ஷ்ட எண்: 9

மகரம்
குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் தனிமை உணர்வில் இருந்து விடுபடுங்கள். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் உங்கள் துணைவருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் சிறிய பிரச்சினை எழுந்து வீட்டில் அமைதியைக் கெடுக்கலாம். உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள்.

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம்
வெற்றிக் கொண்டாட்டங்கள் அளவுகடந்த ஆனந்தத்தைத் தரும். இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு ஆனந்தத்தை அனுபவிக்கலாம். எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும். நீங்கள் எப்போதும் நம்பியவர் உங்களிடம் மிக நேர்மையாக இல்லை என்பதை அறியும்போதுg இன்று மிகவும் கவலைப்படுவீர்கள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் – நிறைவேற்றுவதற்கு கஷ்டமான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்கள் வேலை இன்று பலரும் பாராட்டும் வகையில் இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 7

மீனம்
உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த கஷ்டப்படுவீர்கள் – வழக்கத்துக்கு மாறான நடத்தையால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் குழப்பமாகி வெறுப்படைவார்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எல்லோரையும் ரிலாக்ஸ் செய்ய வைத்து இனிய மன நிலையில் வைக்கும். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக சிறந்த விஷயத்தை உங்களுக்கு அளிக்க போகிறது. உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். இன்று, உங்கள் துணை இந்த உலகிலே சிறந்தவர் நாம் தான் என்ற உணர்வை உங்களுக்கு கொடுக்கும்

அதிர்ஷ்ட எண்: 4

Related posts

Leave a Comment

3 + 8 =