இன்றைய ராசிபலன்கள் 26/08/2017

மேஷம்

மத உணர்வுகள் தோன்றி, புனிதமானவரிடம் இருந்து தெய்வீக அறிவைப் பெற வழிபாட்டு இடத்திற்குச் செல்வீர்கள். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். கல்வியை விட்டுக் கொடுத்து வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபடுவது பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக்கிடும். விளையாட்டைவிட, எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம். உங்கள் பெற்றோரை திருப்திப்படுத்த இரண்டையும் சமமாக பாவித்திடுங்கள். உங்களுடைய டார்லிங் பரிசுடன் நீங்கள் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இன்று உங்கள் வேலையில் சிறப்பாக நீங்கள் ஏதேனும் செய்ய கூடும். நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். சாதாரண திருமண வாழ்க்கைக்கு இடையில் இன்று மிக இனிப்பான நாள்..

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம்

உங்கள் ஆரோக்கியத்துக்காக நீண்ட தூரம் வாக்கிங் செல்லுங்கள். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். வீட்டில் உள்ளவர்களுடன் அருமையான மற்றும் வித்தியாசமான எதையாவது நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் இதயம் மற்றும் மனதில் ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றியும் அங்கீகாரமும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். இந்த நாள் மற்ற எல்லா நாட்களை விட சிறப்பான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட எண்: 4

 

மிதுனம்

எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தி ஆத்திரமூட்டலாம். உடலுக்கு ஆயில் மசாஜ் செய்து தசைகளுக்கு நிவாரணம் கொடுங்கள். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். உங்கள் வீட்டுக் கடமைகளை புறக்கணித்தால் உங்களுடன் வாழும் ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாவார். காதலில் இன்று உங்களின் முடிவெடுக்கும் சக்தியைப் பயன்படுத்துங்கள். வெற்றி பெற்றவர்களுடன் இருங்கள். எதிர்கால டிரெண்ட்கள் பற்றிய ஒரு பார்வையை அது தரும். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். இன்று, உங்கள் வாழ்க்கை துணைவர்/துணைவி உங்களை பற்றி அவர் நினைக்கும் அத்தனை விஷயங்களையும் பழைய விஷயங்களையும் ஆனந்தமாக நினைவு கூர்வார்.

அதிர்ஷ்ட எண்: 2

கடகம்

குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதை தவிர்த்துவிட முடியாது. எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் அனுமானிக்க முடியாத மனநிலையில் இருப்பார். காதல் எப்போதும் கண் இல்லாதது என்பதால் ரொமான்சில் புத்தியைப் பயன்படுத்துங்கள். போட்டித் தேர்வுக்கு செல்பவர்கள் அமைதியாக இருக்கவும். தேர்வு பயம் உங்களை பதற்றமாக்கிவிடக் கூடாது. உங்களின் முயற்சிக்கு நிச்சயமாக பாசிடிவான ரிசல்ட் கிடைக்கும். பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். இன்றைய நாள் சிக்கல்கள் நிறைந்த்து. உங்கள் திருமண வாழ்க்கையும் அதில் ஒன்றாகலாம்.

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம்

உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தில் நெருக்கமான ஒருவர் உங்களை பொறாமை மற்றும் எரிச்சல் அடையச் செய்யலாம் – மாறாக நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். காதலிப்பவர் ரொமாண்டிக் மூடில் இருப்பார். சிறிது காலம் நீங்கள் சொந்தக் காலில் நிற்பது போல தோன்றுகிறது – சகாக்கள் / அசோசியேட்கள் உங்கள் உதவிக்கு வரலாம் – ஆனால் அதிக உதவி செய்ய முடியாமல் போகலாம். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று ரிவைன்ட் பட்டனை அழுத்தி காதல் அரும்பிய காலத்தில் நிகந்த விஷயங்களை அசை போட்டு உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3

கன்னி

உணர்ச்சிக்கு ஆட்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். அது உங்கள் குழந்தையின் நலனை பாதிக்கலாம். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். உங்களை மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்விக்கும் அளவுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். உங்கள் உற்சாகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். ஒருவருடைய தலையீடு காரணமாக உங்கள் மனதிற்கினியவருடன் உறவு பாதிக்கப்படலாம். வேலை இடத்தில் புதிய பிரச்சினைகள் எழும்- குறிப்பாக நீங்கள் டிப்ளமேட்டிக்காக விஷயங்களைக் கையாளாவிட்டால். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் – அது கடினமாகவும் – ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். உங்கள் அலுவலக வேலை இன்று உங்கள் துணையின் நடத்தையால் பாதிப்படையும்.

அதிர்ஷ்ட எண்: 2

துலாம்

உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதில் அதை செலவிட வேண்டும். நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் அல்லது நீங்கள் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள். உங்கள் வீட்டுக் கடமைகளை முடிக்க பிள்ளைகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் இதுபோன்ற வேலைகளை செய்வதற்கு அவர்களுக்கு ஊக்கமளியுங்கள். காதலில் மூர்க்கத்தனமாக இருந்ததற்கு மன்னிப்பு கேளுங்கள். சம்பள உயர்வு உங்களை உற்சாகப்படுத்தலாம். உங்கள் வருத்தங்கள் மற்றும் புகார்கள் அனைத்தையும் அகற்ற வேண்டிய நேரம் இது. தூரமான இடத்தில் இருந்து மாலையில் பின்பகுதியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். திருமண வாழ்வில் அதிக எதிர்பார்ப்பு இருந்தால் இன்று ஏமாற்றம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம்

போதும் என்ற வாழ்வுக்கு மனதின் உறுதியை மேம்படுத்துங்கள். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். பள்ளிக்கூட பிராஜெக்ட்கள் பற்றி இளையவர்கள் சில அறிவுரை கேட்கலாம். உங்கள் கண்கள் பிரகாசமாக உள்ளன. காதலரின் இரவையும் அது வெளிச்சமாக்கும். அபீசில் வீடியோ கேம் விளையாடுவதால் நீங்கள் இன்று சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரலாம். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். திருமண வாழ்வில் உண்மையான இன்பத்தை நீங்கள் இன்று அடைவீர்கள்..

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு

வெறுப்பு உணர்ச்சி உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்துவிடாதீர்கள். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்கள் அக்கறையற்ற போக்கால் பெற்றோர் கவலைப்படுவார்கள். எந்தவொரு புதிய பிராஜெக்டையும் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். காதல் தேவன் உங்கள் மீது காதல் கணையை வீச போகிறார். உங்களை சுற்றி நடப்பதை கவனித்து செயல்பட வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. பெற்றோரை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால் – மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். Iசில நாட்களாக நீங்களும் உங்கள் துணையும் மிக மகிழசியாக இல்லாவிடினும் இந்த நாள் உங்களுக்கு மிக மகிழ்சிகரமான நாளாகவே அமையும்.

அதிர்ஷ்ட எண்: 3

மகரம்

இன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது – பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். உங்களை மகிழ்விக்க, குழந்தைகள் தங்களால் ஆனதைச் செய்வார்கள். இன்று கனவு நாயகியை சந்திப்பதால் உங்கள் கண்கள் ஆனந்தத்தால் பிரகாசமாக இருக்கும், இதயத் துடிப்பு அதிகமாகும். இன்று ஆபீசில் அருமையான ஒருவரை சந்திப்பீர்கள். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. வீனஸ் போன்றவர்கள் பெண்கள் மார்ஸ் போன்றவர்கள் ஆண்கள். ஆனால் இன்று வீனசும் மார்சும் ஒருவருள் ஒருவர் கரைந்து உருகும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம்

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று நிலம், ரியல் எஸ்டேட் அல்லது கலாசார திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து நல்ல செய்தியுடன் இந்த நாள் தொடங்கும். வீட்டில் பிரச்சினைகள் எழக் கூடும் – ஆனால் சிறிய விஷயங்களுக்காக துணைவரை குறைசொல்வதைத் தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் வேலையில் சிறப்பாக நீங்கள் ஏதேனும் செய்ய கூடும். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். உங்களுக்கு இன்று உங்கள் துணை போதுமான கவனத்தை உங்களுக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுக்காத்தால் உங்களுக்கு வருத்தம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்: 1

மீனம்

இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். ஆனால் அதேசமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். புதிய முதலீடுகள் என்று வந்தால் சுதந்திரமாக இருந்து நீங்களே முடிவெடுங்கள். காதல் விவகாரத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். வேலையில் இன்னும் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். மற்றவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஒரு வெளி நபர் உங்கள் இருவருக்கும் நடுவில் சண்டை மூட்டிவிட முயற்சி செய்வார். ஆனல்ல் நீங்கள் அதற்க்கு இடம் கொடுக்க மாட்டீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7

Related posts

Leave a Comment

twenty + 2 =