‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்டார்’ எனும் திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க.. படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்மன்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள்…
Read MoreTag: கீதா கைலாசம்
DeAr விமர்சனம்
மேலோட்டமாக படத்தின் ட்ரைலரை மட்டும் வைத்துப் பார்த்தால் குறட்டை தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வதில் இருக்கும் சிக்கல் தான் இத்திரைப்படம் என்று தோன்றும். ஆனால் திரைப்படம் அதையும் தாண்டி குடும்பம் என்னும் அமைப்புக்குள் இருக்கும் ஆண்களின் பல்வேறுபட்ட குறைபாடுகளையும் ஓரளவிற்குப் பேசி இருக்கிறது. தீபீகாவான ஐஸ்வர்யா ராஜேஸுக்கு சிறுவயதில் இருந்தே குறட்டை விடும் பிரச்சனை இருந்து வருகிறது. இதை வெளிப்படையாக அவர் தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளிடம் தெரிவிக்க, அவரின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதனால் ஒருகட்டத்தில் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, தன் குறையை மறைத்து, பெண் பார்க்க வந்த அர்ஜூனாகிய ஜி.வியை மணமுடிக்கிறார். முதலிரவன்றே ஐஸ்வர்யாவின் குறட்டைப் பிரச்சனை வெளியே தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளுமே DeAr திரைப்படம். படத்திற்கு மிகப்பெரிய பலமே நடிகர் நடிகைகள் தேர்வு…
Read More