‘பூமி’ சினிமா விமர்சனம்

‘பூமி’ சினிமா விமர்சனம். சமூக அக்கறை சுமந்த படங்களின் வரிசையில் புதுவரவாய் ‘பூமி.’ ஜெயம் ரவியின் 25-வது படம்! ஜெயம் ரவி 16 வயதிலேயே சேட்டிலைட் தொழில் நுட்பத்தில் லெப்ட், ரைட் வாங்குகிறார். அதன் காரணமாக நாசாவில் வேலை கிடைக்கிறது. ‘செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியும்’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிற விஞ்ஞானிகளில் ஒருவராக செயல்படுகிறார். இடையில் விடுமுறை கிடைத்து தன் சொந்த கிராமத்துக்கு வருகிறார். சுயலாபத்துக்காக இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் கரங்கள், தன் கிராமத்தைக் கூறுபோட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து கொதிக்கிறார். கிராமத்தைக் காப்பாற்ற, கார்ப்பரேட் கம்பெனிக்கெதிராய் களமிறங்குகிறார். விரிகின்றன வழக்கமான ஹீரோயிஸக் காட்சிகள்… இயக்கம்: லெஷ்மணன் ஜெயம் ரவியின் நடிப்பு துடிப்பு. டயலாக் டெலிவரி தீ! ஹீரோயின் நிதி அகர்வால் அழகாக இருக்கிறார். கவர்ச்சியாக வருகிறார், போகிறார். டூயட் பாட்டில் மேடம் செம ஹாட்!…

Read More