விஜய் – அட்லி கூட்டணி இணையுமா?

நடிகர் விஜய் நடிக்கும் 65-வது படம் சம்பந்தமான செய்திகள் கொரோனா வைரஸைக் காட்டிலும் வேகமாகப் பரவி வரும் இந்த நேரத்தில் விஜய்யின் அதற்கடுத்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்க வாய்ப்பிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 2016-ம் ஆண்டு ‘தெறி’ என்ற படத்தையும் 2017-ம் ஆண்டு ‘மெர்சல்’ என்ற படத்தையும் விஜய்யை வைத்து இயக்கியிருந்தார் அட்லீ. இந்த இரண்டு படங்களுமே விஜய்யின் மார்க்கெட் மென்மேலும் உயர்வதற்கு பெரிதும் துணை புரிந்தன. ஆனால், இந்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களுமே அட்லீயின் அதீத பொருட் செலவினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் அட்லீயை புதிய படங்களுக்கு புக் செய்ய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களே பெரிதும் தயங்கினார்கள். இடையில் அட்லீ பாலிவுட்டுக்கு சென்று நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு ஹிந்தி படத்தை இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இது அனைத்தும் பேச்சளவிலேயே இப்போதுவரையிலும் இருக்கின்றன.…

Read More