அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள்

அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள்   இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில், அட்டக்கத்தி தினேஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றப் படம் அண்ணனுக்கு ஜே. இத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார், ஒரு தாய் மக்கள் என்ற ஆவணப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதலை மையப் படுத்தி, தமிழர்களின் வாழ்வியலையும், வெளிக்கொணரப்படாத வரலாற்று உண்மைகளையும் பல்வேறு கோணங்களில் அணுகுகிறது இந்த ஆவணப்படம். தமிழ் நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடைப்பெறும் இடங்களில் எல்லாம் படக்குழுவினர் களமிறங்கி, மாடு பிடி வீரர்களுடன் பல மாதங்கள் பயணம் செய்து, இதுவரை காணாத காட்சிகளை, எட்டுக்கும் மேற்பட்ட கேமராக்களைக் கொண்டு பதிவு செய்து இருக்கின்றனர். மாடு பிடி வீரர்கள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் வாழ்வியல், மாடு பிடிப்பதில் இருக்கும்…

Read More

நம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்…

நம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம். நம் இந்திய நாடு, விவசாயப்பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டது… சுதந்திரத்துக்குப்பின், நம்மை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் தவறான கொள்கை முடிவுகளால், மீண்டும், அந்நிய கார்ப்பரேட்டுகள், பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்ற பெயர்களால், மிகவும் தந்திரத்துடன், உரம், பூச்சிக்கொல்லி, வீரிய கலப்பினம் என்ற பெயர்களில் விஷத்தை நம் கைகளாலேயே போட வைத்து, நம் செல்வங்களை கொள்ளையடித்ததோடு, நம் மண்ணையும் மலடாக்கி விட்டார்கள்.. அதன் காரணமாக, இன்று நம் விவசாயப்பெருமக்கள், வாழ வழி தெரியாமல் தவிப்பதோடு, தற்கொலையும் பண்ணிக்கொள்கிறார்கள்… விவசாயத்தொழிலை ஆதாரமாக வைத்து இயங்கிய சிறு, குறு வணிகப்பெருமக்களும் வழி தெரியாமல் தவித்து நிற்கின்றனர். இது போக, விவசாயம் பொய்த்துப்போனால், விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, நம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும், கனிம வளங்களை, அரசியல்வாதிகளின் துணையோடு கொள்ளையடிக்க, கார்ப்பரேட்டுகள் முயன்று கொண்டிருக்கின்றனர்……

Read More