ராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம், ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கதையை அலசுகிறது. ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட் படத்தை காணலாம். 30,000க்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இது படைப்பாளிகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தடையற்ற ஸ்ட்ரீமிங்கை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவுகிறது. வாங்குபவர்களுக்கு, உரிமையாளர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தின் காப்புரிமையை கொண்டுள்ளது. படைப்பாளிகளை பொறுத்தவரை, மேம்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஆர்எம், நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உள்ளடக்க விநியோகம் மற்றும் நிகழ்நேர பரிவர்த்தனைகளில்…
Read MoreMonth: June 2020
நகைச்சுவை நடிகர் சூரி :வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்!
“வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்” மற்றும் “மாற்றம் பவுண்டேஷன்” மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் மனிதாபிமான செயலை அவர் பாராட்டினார். நடிகர் சூரி பேசுகையில், “எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்கு சந்தோஷம், அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது. கடந்த 3 மாதத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கொரோனாதான். ‘தேவையின்றி வெளியே வராதீர்கள், உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்’ என நமக்கு அடிக்கடி…
Read Moreசீயான் விக்ரம் – கார்த்தி சுப்புராஜ் – அனிருத் – துருவ் விக்ரம்: பிரம்மாண்டமாக உருவாகிறது ‘சீயான் 60’
ஒரு படம் அறிவிக்கும் போதே, அதற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே இடம்பெற வேண்டும். அப்படியான அறிவிப்புகள் வெளியாவது கொஞ்சம் தான். சீயான் விக்ரம் தனது ஒவ்வொரு படத்தின் அறிவிப்பையும் எதிர்பார்ப்புகுரிய படமாகவே அமைத்து, அறிவித்து வருகிறார். தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடித்து தொடங்கவுள்ளது. ஒவ்வொரு படத்திலுமே தனது நடிப்பால் அசரடித்து வரும் சீயான் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார். ஆம்.. முதன் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ‘ஆதித்ய வர்மா’ படத்தில் தன் நடிப்பால் அனைவரையும் கலங்கடித்த துருவ், தன் அப்பாவுடன் இணைந்து களமிறங்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். சூப்பர் ஸ்டாருடன் ‘பேட்ட’ என்ற…
Read Moreவேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தயாரித்த ஐந்தாயிரம் முகக்கவசங்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது!
ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து, தங்களின் தனிப்பட்ட முயற்சியால் ஐந்தாயிரம் முகக்கவசங்களைத் தைத்துள்ளனர். இந்த நற்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். சிறந்த ஆசிரியர்கள் மற்றும் சிறந்த பாடத்திட்டம் மூலம் மாணவர்களைச் சாதனையாளர்களாக மாற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம், மாணவர்கள் அனைவரும் எடுத்திருக்கும் இந்த முயற்சியால் பெருமிதம் கொள்கிறது. பெற்றோர்களுடன் வீட்டினுள் அடைப்பட்டு கிடக்கும் இந்த வேளையில், ஒரு பொறுப்புள்ள குடிமகனாய் சமூகச் சிந்தனையோடும், தன்னம்பிக்கையோடும், நாட்டுமக்களுக்கு உதவும் வகையில் முகக்கவசம் தயாரித்திருப்பது பெருமை கொள்ளச் செய்கிறது. இதனைத் தொடர்ந்து, பள்ளித் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் அவர்கள் உத்தரவின்பேரில், பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யலயாவின் முதல்வர் திருமதி. வி.செல்வநாயகி அவர்கள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களிடம் ஜுன் 1 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஐந்தாயிரம் முகக்கவசங்களை வழங்கினார். மாணவர்களின்…
Read More