’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது. நடிகை ஆராத்யா தேவி, “நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கதாபாத்திரத்தில்தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை இந்தப் படம் பேசுகிறது. நிச்சயம் பெண்கள் இதை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த…

Read More

எம்புரான்- திரை விமர்சனம்

கேரள முதல்வர் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் மோகன்லால், முதல்வரின் மகன் டோவினோ தாமஸை புதிய முதல்வராக்கி விட்டு கேரளாவில் இருந்து வெளியேறுவது போல் ‘லூசிஃபர்’ படம் முடிவடையும். அதன் தொடர்ச்சியாக இதோ இரண்டாம் பாகம். முதல்வரான டோவினோ தாமஸ், மத அரசியல் செய்யும் தேசிய கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதால் மீண்டும் கேரள அரசியலில் குழப்பம். இதனால், மறுபடியும் கேரளா வரும் மோகன்லால், தனது அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைக்கிறார்? என்பது கதைக்களம். இதற்குள் அவரது சர்வதேச மாஃபியா வாழ்க்கையையும் அனல் தெறிக்க தந்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் மாநில அரசியல் பேசிய இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், இரண்டாம் பாகத்தில், மாநிலங்களை ஆக்கிரமிக்க திட்டமிடும் தேசிய கட்சிகளின் நடவடிக்கையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.குரேஸி ஆப்ராம்…

Read More

வீர தீர சூரன் – திரை விமர்சனம்

மதுரையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க பெரியவர் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து கதை தொடங்குகிறது.அந்த பெரியவர் வீட்டில் வேலை பார்த்த கொண்டிருந்த தன் கணவரை காணோம் என்று ஒரு இளம் பெண் தன் குட்டி மகளுடன் பெரியவர் வீடு தேடி வந்து தகராறு செய்கிறாள். பெரியவரின் மூத்த மகன் அந்தப் பெண்ணை அடித்து துரத்துகிறான்.இதற்கிடையே பெரியவர் வீட்டுக்கு தன்னை தேடிப்போன மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று அவள் கணவன் போலீசில் புகார் தர…ஏற்கனவே பெரியவர் குடும்பத்தின் மீது தீரா பகையிலிருந்த அந்த ஏரியா எஸ்.பி. அருணகிரி, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுகிறார். பெரியவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடைத்தது போல் போலியாக ஏற்பாடு செய்து பெரியவரையும் அவர் மகனையும் என்கவுண்டரில் போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடுகிறார். இந்த தகவல் பெரிய வருக்கு தெரிய வர….மகன் ஒரு…

Read More

“கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெல்யர் வெளியீட்டு விழா திரையில் !!

ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. *நடிகை சுதா பேசியதாவது…* மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமை, எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி. *நடிகை சாந்தி பேசியதாவது…* மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் இயக்குநருக்கு நன்றி, என் முதல் படம் என்னை நம்பி சான்ஸ் தந்ததற்கு நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது, படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி *நடிகர் வைகுண்டம் பேசியதாவது பேசியதாவது…* இந்தப்படத்தில் வில்லன்…

Read More

அறம் செய் – திரை விமர்சனம்

தான் படிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சக மாணவர்களுடன் சேர்ந்து போராடுகிறார், மருத்துவக் கல்லூரி மாணவரான பாலு s.வைத்தியநாதன். இதனால் அவருக்கு அந்த கல்லூரி தரப்பில் இருந்தும் அரசு தரப்பிலிருந்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல்கள் வருகின்றன. இன்னொரு பக்கம், நாயகி அஞ்சனா கீர்த்தி ‘அறம் செய்’ என்ற அரசியல் அமைப்பின் மூலம், நாட்டில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முயல்கிறார். இதனால், அவருக்கும் பல்வேறு எதிர்ப்புகள் வருகிறது. இதனால், தங்கள் தரப்பில் பல இழப்புகளை சந்திக்கிறார். ஆனாலும் கொள்கையில் உறுதியாக நிற்கும் இவர்களின் போராட்டம் வென்றதா? என்பது கிளைமாக்ஸ். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாலு எஸ்.வைத்தியநாதன், சமூகப்பிரச்சனைப் பற்றி பேசுகிறார். தங்கள் மருத்துவக் கல்லூரி தனியார் வசம் போய்விடக்கூடாது என்பதற்காக சிறு மாணவர்…

Read More

தி டோர் – திரை விமர்சனம்

கட்டிடக்கலை நிபுணரான பாவனா வடிவமைக்கும் கட்டிட பணிக்காக சிறு கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது . கோவில் இடிக்கப்பட்ட அதே நாளில் பாவனாவின் தந்தை சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இதன் பிறகு பாவனாவை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. ஓரிரு முறை அவர் கண் முன் ஒரு அம்மாவும் பெண்ணும் ஆவி தோற்ற த்தில் அடிக்கடி வந்து போகிறார்கள். இதனால் பயந்து போகும் பாவனா, அந்த அமானுஷ்ய சக்தி பற்றி விசாரிக்க முயல்கிறார். அது தொடர்பாக அவர் யாரையெல்லாம் பார்த்துவிட்டு வருகிறாரோ அந்த நபர்கள் மறுநாளே இறந்து போன தகவல் தெரிய வருகிறது. அவர்களின் இறப்புக்கும், பாவனாவுக்கும் என்ன சம்பந்தம்?, அவரை பின் தொடரும் ஆவிகளின் பின்னணி என்ன? என்பதை திகிலும் திரில்லருமாய் சொல்லி இருக்கிறார்கள். தமிழில் கொஞ்சம் இடைவெளி விட்டு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் பாவனா,…

Read More

கார்த்திக் ராஜா பின்னனி இசை அமைக்கும் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்த இயக்குனர் வீர அன்பரசு, இரண்டாவது கதாநாயகன் ஆகாஷ் முத்துவுடன் சென்று, பின்னணி இசை அமைக்க கேட்டுக் கொண்டார். கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைக்க உடனே ஒப்புக் கொண்டார்! நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை தான் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ஆகாஷ் முத்து, ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. ஒளிப்பதிவு…

Read More

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கும் ‘பெடி ( PEDDI) ‘படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – ஜான்வி கபூர் – புச்சிபாபு சனா – ஏ. ஆர். ரஹ்மான்- வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் – ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘ பெடி ( PEDDI) ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.‌ தேசிய விருது பெற்ற ‘உப்பென்னா ‘ படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் 16 வது படமாக தயாராகும் இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கும் இந்த கூட்டணி, வெள்ளித்திரையில் புயலை கிளப்ப தயாராக உள்ளனர். இந்த பான் இந்திய திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய…

Read More

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!

ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் தாங்களும் தெய்வீக தன்மையை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டிகை சூழலில் அந்த இடமே பக்தி சூழலில் அமைந்தது அங்கிருந்தவர்களுக்கும் சிலிர்ப்பான அனுபவம் கொடுத்தது. வெப் சீரிஸில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் கொண்டாடப்படுகிறது. இதில் சீமா பிஸ்வாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘பண்டிட் குயின்’ படத்தில் கதாடி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சீமா. ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சவால்களையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு நடந்த குலசேகரபட்டினம் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கின் நிலப்பரப்புகள் கரடுமுரடானது. ஆனால், அதற்கு நேர்மாறாக அங்கிருந்த மக்கள் அதீத அன்புடன் இருந்தனர். நான் மிகுந்த…

Read More

மார்ச் 28 ஆம் தேதி முதல் ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி தளத்தில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீம் ஆகும் ‘செம்பியன் மாதேவி’ திரைப்படம்!

8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பத்மநாபன் லோகநாதன் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்த படம் ‘செம்பியன் மாதேவி’. சமூகத்தில் நடக்கும் சாதி பாகுபாட்டினை மையப்படுத்தி உருவான இப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் வியாபார ரீதியாக எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. காரணம், இப்படம் வெளியான போது மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முன்னணி இயக்குநர் ஒருவரது படத்தால் போதிய திரையரங்குகள் கிடைகாமல் போனது. இருந்தாலும், இப்படத்தின் கதைக்களம் மற்றும் சொல்லப்பட்ட கருத்து ஆகியவற்றை பத்திரிகையாளர்கள் மட்டும் இன்றி படம் பார்த்தவர்களும் வெகுவாக பாராட்டினார்கள். இந்த நிலையில், முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான ராஜ் தொலைக்காட்சியின் ஓடிடி நிறுவனமான ராஜ் டிஜிட்டல்…

Read More