கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர்

இந்தியக் கல்வி வளர்ச்சியில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் கோ.விஸ்வநாதன் ஐயா அவர்கள் ஆற்றிய சேவையைப் பாராட்டி அமெரிக்காவின் பிங்ஹாம்டன்  பல்கலைக்கழகம், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் வேலூரில் நடைபெற்ற விழாவில் நானும் பங்கேற்றேன். கல்வித்துறையில் எனக்கு ஆசானாக விளங்கும் ஐயா அவர்கள் ஆற்றிய கல்விச்சேவை பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கியது, உயர் கல்வியின் முக்கியத்துவத்தை மக்களிடம் போதித்தது. இந்தியாவின் பல மூலைகளில் இருந்தும் இங்கு கல்வி பயில வந்த மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியது. இத்தகைய மகத்தான மனிதரின் பாராட்டு நிகழ்வில் பங்கேற்றது எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது.

Read More

டி.ராஜேந்தர் ஆர்.எம்.வீரப்பனுக்கு வெளியிட்ட இரங்கல் செய்தி

மறைந்து விட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய ஒப்பற்ற உதவியாளராக, சரித்திரம் படைத்த சத்யா மூவிஸ் நிறுவனத்தின் சாதனை படைத்த தயாரிப்பாளராக, பல்வேறு காலகட்டங்களில் அரசியல் களத்தில் போராட்ட வீரராக, அண்ணா திமுகவின் முன்னாள் அரும்பெரும் செயலாளராக, முன்னாள் அமைச்சராக ஒய்வின்றி பணியாற்றிய ஆருயீர் அண்ணன் ஆர்.எம்.விரப்பன் அய்யா அவர்களின் மறைவு மனதிற்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய இழப்பு தமிழ் நல்லுலகிற்கே பெரும் இழப்பாகும். அமரராகிவிட்ட அய்யாவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். இப்படிக்கு, டி. ராஜேந்தர் M.A, தலைவர், இலட்சிய திமுக, தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் கௌரவ ஆலோசகர், தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம்.

Read More