முதல் சீசனை விட இரண்டு மடங்கு ஆச்சரியங்களுடன் “வேற மாறி ஆபிஸ் – சீசன் 2”

தென்னிந்திய ஓடிடி உலகில், மக்களின் வாழ்வியலோடு கலந்த, பிராந்திய மொழி படைப்புகளை சிறப்பாக வழங்குவதில், முன்னணி ஓடிடி தளமாக ஆஹா ஓடிடி தளம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பல நல்ல படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும், ஆஹா தமிழ் ஓடிடி தளம், இன்றைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைக் குவித்த ‘வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரிஸின், அடுத்த பாகத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. ஒரு ஐடி அலுவலகத்தில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் நகைச்சுவை அனைவரும் ரசிக்கும் வகையில், மிக அற்புதமாக கூறிய “வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரிஸ், இன்றைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்த வெப் சீரிஸ் இளைஞர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்ததோடு, ஆஹா தமிழ் தளத்திற்கு பல புதிய வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்தது குறிப்பிடதக்கது. மக்களின் மனம் கவர்ந்த…

Read More

அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் “ராக்கெட் டிரைவர்”

ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் “ராக்கெட் டிரைவர்”. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக “ராக்கெட் டிரைவர்” உருவாகிறது. இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.   தான் செய்த தவறுகளால், தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்று என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர், உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், தனது ரோல் மாடலை அவரது 17-வயதில் காண்கிறார். அப்போது அரங்கேறும் விசித்திர சம்பவம் விபரீதத்தில் முடிகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதை. அறிமுக நாயகன் விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும்…

Read More