லண்டனில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அடுத்த வருடம் வேலுநாச்சியார் பிறந்த நாளுக்கு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாகிறது

டிரண்ட்ஸ் சினிமாஸ் ஜெ எம் பஷீர் தயாரிப்பில் ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆயிஷா நடிக்கும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ டீசர் வேலுநாச்சியார் பிறந்தநாள் அன்று வெளியீடு* லண்டனில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அடுத்த வருடம் வேலுநாச்சியார் பிறந்த நாளுக்கு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாகிறது இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட ஒரே அரசியுமான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ எம் பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர் அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா. ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் பகம்பொன் முத்துராமலிங்க தேவராக…

Read More

மழையில் நனைகிறேன் -திரை விமர்சனம்

பட்டப்படிப்பை முடிக்காமல் நண்பர்களுடன் வெட்டியாக ஊர் சுற்றி வரும் பணக்கார இளைஞன் அன்சன் பால்.அமெரிக்கா சென்று மேற்படிப்பை முடிக்க அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடும் நாயகி பிரபா ஜான்.ஒரு மழை நேர பொழுதில் நாயகியை சந்திக்கும் நாயகனுக்கு பார்த்ததுமே காதல் பற்றிக்கொள்ள, அவள் கண்ணில் படும் போதெல்லாம் காதலை சொல்ல முற்படுகிறான், அதற்காக அவளை விடாமல் துரத்துகிறான். ஒரு கட்டத்தில் நாயகனின் அணுகுமுறை பிடிக்காத நாயகி எதற்காக இந்த தொடரல் என்று விசாரிக்கிறாள்.நாயகன் காதலை சொல்ல, நாயகியோ தன் அமெரிக்க கனவை சொல்லி என்னை மறந்து விடு என்கிறாள். ஆனால் நாயகனோ, நீ என் காதலை ஏற்றுக் கொள்ளும் வரை உன்னை தொடர்வது நிற்காது என்று அடம் பிடிக்க…ஒரு கட்டத்தில் நாயகியும் காதலுக்கு ஓகே சொல்ல முடிவு செய்கிறாள். அதற்காக அவனுடன் குறிப்பிட்ட இடத்திற்கு பைக்கில் பயணம்…

Read More