தயாரிப்பாளர் சங்கத்தைக் அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து விஷால் முறையீடு..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவினை கலைத்துவிட்டு அதன் நிர்வாகியாக பதிவாளர் ஆர்.சேகரை நியமித்ததை எதிர்த்து, நீக்கப்பட்ட தலைவர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். நடிகர் விஷால் தலைமையிலான குழுவினர் கடந்த முறை நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தனர். இவர்கள் பொறுப்புக்கு வந்தததில் இருந்தே விஷால் குழுவினர் மீது பல்வேறு புகார்கள் பகிரங்கமாச் சொல்லப்பட்டு வந்தன. சங்கத்திற்குத் தேவையில்லாமல் வேறொரு அலுவலகம் அமைத்தது. சங்கத்தின் அறக்கட்டளையில் இருந்து 7 கோடி ரூபாயை பொதுக் குழுவின் அனுமதியில்லாமல் எடுத்தது.. சங்க உறுப்பினர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே ஓய்வூதியத்தையும், தீபாவளி மற்றும் பொங்கல் பரிசுகளை வழங்கியது.. சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது.. சங்கத்தில் கொடுக்கும் புகார்களுக்கு பதிலே அளிக்காமல் இருந்தது.…

Read More