சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தால் (FIAPF) அங்கீகரிக்கப்பட்ட ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவாக வகைப்படுத்தப்பட்ட எஸ்டோனியாவில் நடைபெறும் தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழா, அதன் 29வது பதிப்பை எஸ்டோனியாவின் தாலினில் நிறைவு செய்தது. இந்த ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமான முதல் சிறப்புப் போட்டி நடுவர் குழுவில் பணியாற்ற பிளாக்பஸ்டர் ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம் நியமிக்கப்பட்டார். இளங்கோ ராமின் திரைப்படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) 2023 ஆம் ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு சிறப்பு நடுவர் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போட்டிப் பிரிவில் நடுவர் குழு உறுப்பினராக 2025 இல் அவர் நியமிக்கப்பட்டிருப்பது கெளரவமாகும். இந்த ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழு…
Read MoreMonth: November 2025
ஐ பி எல் – திரை விமர்சனம்
மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் போஸ் வெங்கட் லஞ்சம் வாங்குவதை இளைஞன் ஒருவன் வீடியோ எடுத்து விட்டதாக தவறாக சந்தேகப்பட்டு அவனை காவல் நிலையம் கொண்டு சென்று தாக்குகிறார். இந்த தாக்குதலில் அந்த இளைஞன் இறந்து போக… கொல்லப்பட்டவனின் செல்போனை ஆராயும் போது அரசியல் பிரபலம் சம்பந்தப்பட்ட பரபரப்பான வீடியோ இருப்பதைப் பார்க்கிறார். இது விஷயம் சம்பந்தப்பட்ட அரசியல் புள்ளிக்குப் போக…இப்போது காட்சி மாறுகிறது. அந்த லாக்கப் மரணத்திற்கு வாடகை கார் ஓட்டும் அப்பாவி கிஷோர் மீது பழி போட்டு அவரைக் கைது செய்கிறார்கள். மேலிடத்து அழுத்தத்தால் அவரை அடித்து நொறுக்கி பொய் வாக்கு மூலம் வாங்கி நீதிமன்றம் கொண்டு செல்கிறார்கள். கிஷோரின் தங்கையை நாயகன் டிடிஎஃப் வாசன் காதலிக்கிறார். அந்த உரிமையில் கிஷோர் மீதான பொய் வழக்கை உடைத்து நீதியை நிலை நாட்ட அதற்கான ஆதா…
Read MoreB. P. 180 – திரை விமர்சனம்
வடசென்னை காசிமேடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நேர்மையான மருத்துவர் நாயகி தன்யா ரவிச்சந்திரன். விபத்தில் இறந்த ஒரு பெண்ணின் உடற்கூறாய்வில் வயிற்றில் மூன்று மாத கரு இருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்தப் பெண் திருமணமாகாதவள் என்பதால் கரு பற்றி ரகசியம் காக்கும் படி போன் வடிவில் ஏகப்பட்ட பிரஷர். அதில் ஏகப்பட்ட மிரட்டல்களும் அடங்கும். எந்த மிரட்டலுக்கும் பணியாததால் ஒரு கட்டத்தில் அவரை தீர்த்து கட்டவும் துணிகிறார்கள். விபத்தில் இறந்து போனது அந்தப் பகுதியில் பிரபல ரவுடி டேனியல் பாலாஜியின் உறவுக்கார பெண் என்பதால் அவரும் தன் பங்குக்கு நாயகியை மிரட்டுகிறார். நாயகியோ கொஞ்சமும் பயப்படாமல் ‘நீ சரியான ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா’ என்கிறார். இந்த சவாலை ஏற்று கொலை பாதகத்துக்கு கொஞ்சமும் அஞ்சாத டேனியல் பாலாஜி வந்தாரா? அதன் பின் என்னென்ன நடந்தது என்பது…
Read Moreரஜினி கேங் – திரை விமர்சனம்
ரேடியோ சவுண்ட் சர்வீஸ் நடத்தும் ரஜினி கிஷனும் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் மகள் த்விவிகாவும் காதலிக்கிறா ர்கள். காதலுக்கு எதிர்ப்பு வரும் என்று தெரிந்ததும் ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அந்தக் கல்யாணம் நடந்த பின் பல திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கின்றன. அந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு பின்னணியில் மணப் பெண்ணின் தாலி இருக்கிறது. அந்த தாலி கணவனை நெருங்க விடாமல் துரத்துகிறது. கூ ச்சலிடுகிறது. ‘எவண்டா எனக்கு இந்த தாலியை கட்டியது?’ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறது. அப்படியானால் இது ஆவியின் சேட்டையா என்ற கேள்வி எழும் அல்லவா. உண்மையில் அந்த தாலி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதை கட்டிய பிறகு மணமகளிடம் அந்த எதிர்பாராத மாற்றம் ஏன்? கேள்விகளுக்கு விடை எதிர்பாராத கிளைமாக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் ரஜினி கிஷன், நடனம்,சண்டை என எல்லா ஏரியாவிலும் புகுந்து…
Read Moreரேகை – இணையத் தொடர் விமர்சனம்
பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் மர்ம நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எம்.தினகரன் உருவாக்கிய வெப் சீரீஸ் ‘ரேகை.’ யூகிக்க முடியாத திருப்பங்களோடு, அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய புலனாய்வு திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார். 6 எபிசோட்களையும் ஒன்றாக பார்த்தாலும், நேரம் போனதே தெரியாதவாறு விறு விறு கதையமைப்பு இ தன் சிறப்பம்சம். ஒவ்வொரு எபிசோட்டிலும் ஒரு திருப்பம், அதன் மூலம் நகரும் கதையின் அடுத்த கட்டம் ஏழாவது எபிசோடு வரை திரில்லருக்கு குறையாத கதை அமைப்பு இதன் சிறப்பம்சம். கதையில் நிகழும் கொலை சம்பவங்களை அறிவியலோடு இணைத்து காட்சிகளை வடிவமைத்த விதம் இன்னும் ஸ்பெஷல். சரி, விமர்சனத்திற்கு வருவோம். ஆண்கள் விடுதி குளியல் அறையில் இளைஞன் ஒருவன் செத்துக் கிடக்கிறான். குளியலறை உள்ளே தாழ்ப்பாள் போட்டு இருக்கும் நிலையில் அது தற்கொலையாகத் தானே…
Read Moreதுல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!
முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் (Jom Varghese) Wayfarer Films சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை, நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) இயக்குகிறார். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா (Sajeer Baba) , இஸ்மாயில் அபூபக்கர் (Ismail Aboobacker), பிலால் மொய்து (Bilal Moidu ) எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன் (Adarsh Sukumaran) , ஷஹபாஸ் ரசீத் (Shahabas Rasheed) ஆகியோர் எழுதியுள்ளனர் ‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்துக்கான மற்ற நடிகர்களின் போஸ்டர்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தன. இப்போது துல்கர் சல்மானின்…
Read Moreவெள்ளக் குதிர — திரை விமர்சனம்
நடுத்தர குடும்பத்தின் அனுதின போராட்ட வாழ்க்கையில் நொந்து போகும் நாயகன், ராங் ரூட்டில் போயாவது சீக்கிரமே செட்டில் ஆக வேண்டும் என்றஎண்ணத்தில் இருக்கிறார். அதற்காக தவறான பாதையை தேர்ந்தெடுத்து மாட்டிக் கொண்டதில் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதாகிறது. இந்த நிலையில் தனது மனைவி மகனுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்காக, தனது மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்து வருகிறார். அவர் நேரம் மீண்டும் சட்ட விரோதமான தொழிலை செய்யத் தொடங்குகிறார். விசேஷங்களுக்காக மட்டுமே அங்கே தயாரிக்கப்படும் போதை தரும் மூலிகை ரசத்தை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கிறார். இதற்கிடையே, அந்த மலைக் கிராம மக்களை ஏமாற்றி, அவர்களது நிலத்தை அபகரிக்கும் வேலையை ரகசியமாக செய்து வருகிறார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர். அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அப்பகுதியை…
Read Moreரிவால்வர் ரீட்டா — திரை விமர்சனம்
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தி சுரேஷ் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே குடும்பத்தை தாங்குகிறார். அப்பா இல்லாத நிலையில் அம்மா, திருமணமான அக்கா, தங்கை என எல்லோரையும் பராமரிக்கும் பொறுப்பு அவருடையது. .புதுச்சேரியைக் கதிகலங்க வைக்கும் தாதா சூப்பர் சுப்பராயன். அவருக்குப் பெண் மோகம் உண்டு. அதை பயன்படுத்தி அவரை கொல்ல திட்டமிடுகிறது ஒரு கூட்டம். ஒரு நாள் வழக்கமான புரோக்கர் ஒருவரின் அழைப்பில் விலைமாதுவை சந்திக்க வரும் இடத்தில் அவரைப் போட்டுத் தள்ள திட்டம் தயாராகிறது. ஆனால் நடந்தது வேறு. தவறுதலாக அவர் கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். அப்போது கீர்த்தி சுரேஷும் அவரது குடும்பமும் சேர்ந்து அவரை தாக்க, தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரை விடுகிறார் சூப்பர் சுப்பராயன். கொலைப்பழியிலிருந்து தப்பிக்க, சட்ட விரோதமாக சடலத்தை அப்புறப்படுத்த மொத்த குடும்பமும்…
Read Moreஇயக்குனர்கள் வெங்கட் பிரபு, கணேஷ் கே பாபு வெளியிட்ட “அனலி” ஃபர்ஸ்ட் லுக்
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தல, தளபதி இருவரையும் வைத்து மிரட்டல் படங்களைக் கொடுத்த இயக்குனர் திரு.வெங்கட் பிரபு மற்றும் டாடா, கராத்தே பாபு படங்களின் இயக்குனர் திரு.கணேஷ் கே பாபு ஆகியோர் வெளியிட்டனர். இயக்குனர் தினேஷ் தீனா அனலி படத்தை பற்றி கூறியதாவது, “இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் நடக்கக் கூடியது. மூன்றாம் உலகப்போர், கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய் மற்றும் ரங்கராவ் ரெட்டி இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஜான்சி மற்றும் அவளது பத்து வயது குழந்தை ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. காட்டு மிருகங்களை விட மிகவும் மோசமானவன் மனிதன் அதில் மிகவும் முக்கியமானவன் இந்த லால்…
Read Moreகே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்”படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது
யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகள் தான், இப்படத்தின் மையம். வாழ்வின் வினோதங்களையும் அன்பையும் பேசும் படைப்பாக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் அம்சங்களுடன், ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன், இப்படத்தை எழுதி இயக்குவதுடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையின் நாயகனாக நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான…
Read More