உயர் போலீஸ் அதிகாரியின் மகள் அலுவலகம் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு கிளம்புகிறாள் ஆனால் அவள் வீடு வந்து சேரவில்லை. கடத்தப்பட்டாளா அல்லது கடத்திக் கொல்லப்பட்டாளா என்பதை கண்டுபிடிக்க காவல்துறை சீறிப் பாய்கிறது. அதேநேரம் ஒரு இளம்பெண் உள்பட மூன்று பேரை கொலை செய்ததாகச் சொல்லி உணவு டெலிவரி இளைஞன் ஒருவன் போலீசில் சரணடைகிறான். அதைப் பற்றி விசாரித்தால் அவன் கொலை செய்ததாகச் சொன்ன மூவரில் இருவர் உயிருடன் இருக்கிறார்கள்.அப்படியானால் அந்த இளைஞன் ஏன் பொய் சொல்ல வேண்டும்? அந்தப் பெண் உயிருடன் இருக்கிறாளா, இல்லையா? கேள்விக்கான விடையே குற்றம் புதிது. கதாநாயகனாக நடித்திருக்கும் தருண் விஜய், நடிப்புக்காக தன்னை முழுதாக தயார்படுத்தி இருக்கிறார். நீதிபதியையும் போலீஸ் அதிகாரியையும் அங்கிள் என்று சொல்லி கலகலப்பு ஏற்றுகிறார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்பாக நின்று கொண்டு அந்த வழியாக வரும்…
Read MoreMonth: August 2025
“கமல் சாருடன் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யுங்கள்” ; நூல் வெளியீட்டு விழாவில் பகிரங்கமாகவே கோரிக்கை வைத்த இயக்குநர் லிங்குசாமி
தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குநர்களில மிக முக்கியமானவர் இயக்குநர் லிங்குசாமி. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி, தன் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். இவருக்கு இயக்குநர் என்பதையும் தாண்டி கவிஞர் என்கிற இன்னொரு முகமும் உண்டு. சொல்லப்போனால் அவருக்குள் இருந்த கவிஞர்தான் அவரை சினிமாவுக்காக சென்னைக்கு அழைத்து வந்ததே என்று சொல்லலாம். அப்படி தனக்குள் இருந்த கவிதைக்கு ஹைக்கூ வடிவம் கொடுத்து ஏற்கனவே இரண்டு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. தற்போது அவரது ஹைக்கூ கவிதைகளின் மூன்றாவது தொகுப்பாக ‘பெயரிடப்படாத ஆறுகள்’ என்கிற பெயரில் லிங்கூ-3 புத்தகத்தை தொகுத்து எழுதியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி. இந்த கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், இயக்குநர் கௌதம்…
Read Moreசொட்ட சொட்ட நனையுது – திரை விமர்சனம்
காரைக்குடியைச் சேர்ந்த வசதி படைத்த ராஜாவிற்கு ஒரே பிரச்சனை, வழுக்கை. பணக்கார குடும்பம் என்று விரும்பும் பெண் வீட்டார் கூட மாப்பிள்ளையின் சொட்டைத்தலை பார்த்ததும் ரிவர்ஸ் அடித்து விடுகிறார்கள். இதனால் நாயகனின் திருமணம் கிட்டத்தட்ட கேள்விக்குறி நிலையில் இருக்க… ஒரு கட்டத்தில் பெண் பார்க்கப் போகும் படலத்துக்கே முற்றுப்புள்ளி வைக்கிறான். இந்நிலையில் திடீர் திருப்பமாக வெளியூரிலிருந்து பாட்டி வீட்டுக்கு வரும் பிரியா, நாயகனின் வழுக்கை பற்றி கவலைப்படாமல் ராஜாவை மணக்க சம்மதிக்கிறாள். இது போதாதா? ராஜாவின் பெற்றோர் தடபுடலாக திருமண தேதி குறிக்க, விடிந்தால் திருமணம். ஆனால் ராஜா முந்தின இரவு திருமணத்தை நிறுத்தி விடுகிறான். கல்யாணத்தை ராஜா ஏன் நிறுத்தினான்? அதன் பின் வேறு எந்த பெண்ணாவது அவனை மணமகனாக ஏற்றுக் கொண்டாளா என்பது கிளைமாக்ஸ். கோடீஸ்வர ராஜாவாக நிஷாந்த் ரூசோ அந்த மொட்டை கேரக்டரில்…
Read Moreகடுக்கா – திரை விமர்சனம்
கிராமங்களில் ‘கடுக்கா’ கொடுத்து விட்டான் என்ற சொலவடை பிரபலம். சிலர் நம்ப வைத்து ஏமாற்றுவார்கள். அப்போது ஏமாந்தவர் விரக்தியாக, :அட கடுக்கா குடுத்துட்டு போய்ட்டான்பா’ என்பார்கள். நாட்டு மருந்து கடைகளில் கடுக்காய் என்ற பெயரில் உடலுக்கு நல்லது செய்கிற ஒரு மருந்தும் உண்டு. இந்த படம் ஏமாற்றுகிற கடுக்காயா? அல்லது உடலுக்கு நலம் சேர்க்கும் நாட்டு மருந்துகளில் ஒன்றா? வாருங்கள் பார்க்கலாம். படத்தின் நாயகன் வேலை வெட்டி எதற்கும் போகாமல் ஊர் சுற்றி திரிபவன். ஊரின் பிரதான பஸ் ஸ்டாப்பில் நின்றபடி பஸ்ஸில் பயணிக்கிற இளம் பெண்களை சைட் அடிக்கும் வேலையை செவ்வனே செய்வான். மீதமிருக்கும் நேரங்களில் கிராமச் சாவடிகளில் ஊர் பெரிசுகளோடு தாயக்கட்டை ஆடுவது உண்டு. இதனால் சொந்த ஊரிலேயே உதவாக்கரை என்று பெயர் எடுத்த நமது நாயகன் அது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ‘தானுண்டு…
Read MoreGEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!
GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. GEMBRIO PICTURES சார்பில் ஷரைலி பாலகிருஷ்ணன் பேசியதாவது… எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம். இந்தப்படம் பார்த்தபோது எங்களுக்குப் புரிந்தது – இந்தப்படம் அனைத்து தரப்பினருக்குமானது என்பது தான்.ஒரு குறிப்பிட்ட தரப்பே பார்க்க வேண்டிய படம் அல்ல; அனைவரும்…
Read Moreயோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வில் பேசியவர்கள் தயாரிப்பாளர் மகேஷ்: எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் பேசுகிறோம் என்று படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். ஆகாஷ் மற்றும்…
Read Moreஇசையமைப்பாளர் போபோ சசியின் ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’ (Before I Fade Away) இசை ஆல்பம் வெளியீடு
Music Video▶️ https://youtu.be/gtiwb1PGOhQ?si=7B7uZBGxBH8sIRLK இசையமைப்பாளர் போபோ சசி, இயக்குநர் யூகி பிரவீன், பாடகி அக்ஷிதா சுரேஷ், இனாரா புரொடக்ஷன்ஸ் கூட்டணியில் உருவான ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’ (Before I Fade Away) சுயாதீன இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இசையமைப்பாளர் முரளி இசை ஆல்பத்தை வெளியிட, இசையமைப்பாளர் சி. சத்யா மற்றும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இணைந்து பெற்றுக் கொண்டனர். திரையிசை பாடல்களுக்கு நிகரான வரவேற்பை தற்போது சுயாதீன இசைக்கலைஞர்கள் உருவாக்கும் இசை ஆல்பங்களுக்கும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் திரைப்பட இசையமைப்பாளரும், பிரபல இசைக்கலைஞருமான போபோ சசியின் இசையில் ‘Before I Fade Away’ இசை ஆல்பம் தயாராகி இருக்கிறது. இந்த இசை ஆல்பத்தை யூகி பிரவீண் இயக்க, அரவிந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இனாரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்…
Read More‘போலீஸ் போலீஸ்’ வெப்தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக உருவாகி இருக்கும் ‘போலீஸ் போலீஸ்’ வெப்தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்ற இதன் முதல் புரோமோவில் மிர்ச்சி செந்தில் (ராஜா) மற்றும் ஜெயசீலன் தங்கவேல் (முரளி) இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது இடம் பெற்றிருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில் ஷபானா ஷாஜகான் நேர்மையான வழக்கறிஞர் லலிதாம்பிகா கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். கலகலப்பான இந்த புரோமோவில் லலிதாம்பிகா முரளியை திருடன் என நினைத்து விடுகிறார். முரளி பணி செய்யும் காவல் நிலையத்திற்கே அவரை அழைத்து செல்கிறார் லலிதாம்பிகா. அவர் வருத்தப்பட வேண்டும் என்பதற்கே போலியான காயத்தை தனக்கு உருவாக்கி லலிதாவை டீஸ் செய்கிறார் முரளி. இவரோடு செந்திலும் சேர்ந்து கொள்ள இந்தத் தொடர் ஆக்ஷன்,…
Read Moreடாக்டர் பிரசித்தா NR மற்றும் திரு. பாலாஜி திருமணம்
சென்னை, ஆகஸ்ட் 29, 2025: ‘முதல் மரியாதை’ புகழ் நடிகர் தீபன் (எ) ராமச்சந்திரன் அவர்களின் மகளும், மறைந்த டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் பேத்தியுமான டாக்டர் பிரசித்தா NR அவர்களின் திருமணம், இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில், பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடைபெற்றது. கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கும் டாக்டர் பிரசித்தா, சென்னை சர்ச் பார்க் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அங்கு அவர் 2014–2015-ஆம் ஆண்டில் ‘சிறந்த மாணவி’ விருதைப் பெற்றார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே கௌரவம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த அவர், தற்போது டெக்சாஸில் முதுகலை மருத்துவக்…
Read Moreரசிகை ராஜேஸ்வரியின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி !!
பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்புகள் பல நேரங்களில் தாற்காலிகமாகவே இருக்கும் இந்த உலகத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை ஏன் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை தனது கருணை மற்றும் அன்பால் நிரூபித்துள்ளார். சமீபத்தில், ஆந்திரப்பிரதேசம், ஆடோனி என்ற ஊரைச் சேர்ந்த அவரின் தீவிர ரசிகை ராஜேஸ்வரிக்காக சிரஞ்சீவி செய்த இதயப்பூர்வமான செயல், பலரையும் உருகச் செய்துள்ளது. தனது வாழ்நாள் கனவான சிரஞ்சீவியைச் சந்திக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், ராஜேஸ்வரி சைக்கிளில் ஏறி தொலைதூரப் பயணம் செய்து ஹைதராபாத்தை அடைந்தார். அத்தனை கஷ்டங்களையும், உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் தனது அன்பும், உறுதியும் அவரை அந்தப் பயணத்தில் முன்னோக்கி நகர்த்தியது. இந்த செய்தி சிரஞ்சீவியின் காதுகளில் விழுந்தபோது, அவர் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை, முழுமனதுடன் தன் ரசிகையின் அன்பை ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டார். சிரஞ்சீவி…
Read More