முதலமைச்சர் எடப்பாடி வியந்து பாராட்டிய அமைச்சர் யார் தெரியுமா?

நிவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை ஒருபக்கம்,பலத்த காற்று ஒரு பக்கம், முழு கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் ஒருபக்கம் என சென்னைவாசிகளை பல முனைகளிலும் நின்று தாக்குகிறது இயற்கை. இந்த சூழலில் வீடுகளை இழந்தோர், உணவில்லாமல் தவிப்போர், தத்தளிக்கும் மீனவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் களத்தில் நிற்கிறார் மூத்த அமைச்சர் ஒருவர். தன் சொந்தப் பணத்தைக் கொண்டு பல்வேறு உதவிகளை இரண்டு நாட்களாக செய்து வருகிறார் அவர். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ரெயின் கோட் அணிந்து தண்ணீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று குறைகளை கேட்பதும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பத்திரமாக முகாம்களுக்கு அனுப்பி வைப்பதும், உணவு சமைத்து தானே விநியோகம் செய்வதும் அத்தியாவசிய பொருட்களை அள்ளிக் கொடுப்பதும் இந்த அமைச்சரின்…

Read More

பைக்கில் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அமைச்சர் ஜெயக்குமார்

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி சென்னை அண்ணாசாலை. இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் செல்லும் சாலை தான் இது.காலை 11 மணி இருக்கும் வெள்ளை வேட்டி, சட்டை அதுவும் அதிமுக கரை வேட்டியுடன் பைக்கில் ஒருவர் ஹெல்மெட் அணிந்துகொண்டு வேகமாய் வந்து ஸ்பென்சர் சிக்னலில் நிற்கிறார். அக்கம் பக்கத்தில் இருந்த வாகன ஓட்டிகள் இவர் யார் என்று சிறிய சந்தேகத்துடன் உற்று நோக்குகின்றனர்.அவர்களைப் பார்த்து கையசைத்து சிரிக்கிறார் அவர். அப்போது தான் அவர்களுக்கு தெரிகிறது அவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பது. காரில் இருந்த சிலர் பைக்கில் இருந்த சிலர் இறங்கி அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்துக் கொள்கின்றனர். “என்ன சார் எங்கே போறீங்க?கார்ல ஏன் வரல? பைக்கில் வந்து இருக்கீங்களே” என்று கேட்கிறார்கள். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சிரித்துக்கொண்டே, ஹெல்மெட் என்பது மிக மிக அவசியம் இன்றைக்கு…

Read More