2000 ஆம் ஆண்டு முதல், இருபது ஆண்டுகளாக ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் திரு T. முருகானந்தம் அவர்களின் இந்த திரைப்பயணம் பெரும் வெற்றி சரித்திரம். இதுவரை தமிழ்நாடு முழுதுமாக 148 படங்களுக்கும் மேலாக விநியோகம் செய்துள்ளார் அதில் உச்ச நட்சத்திரங்கள் அஜித்குமார், விஜய், தனுஷ், மற்றும் பலரின் படங்களும் அடங்கும். இந்நிறுவனம் மூலம் முதல் முறையாக திரை உரிமையை பெற்ற ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு” திரைப்படம் பிரமிப்பு தரும் வெற்றியை பெற்று பெரும் லாபத்தை தந்தது. இந்த வெற்றி பயணம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த “ மேயாத மான்” படத்திலும் தொடர்ந்தது. 2017 தீபாவளிக்கு வெளியான “ மேயாத மான்” ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உள்ள உச்ச நட்சத்திரத்துடன் “வேகம், விவேகம்” படத்திலும் இணைந்தது. மேலும்…
Read MoreMonth: September 2020
சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க கேயார் கோரிக்கை
எஸ்பிபி மறைவு குறித்து தயாரிப்பாளர் கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை: எஸ்பிபி அவர்களின் மறைவுக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் இப்போது வரை வழக்கமான நபராக இருக்க முடியவில்லை. அந்தளவுக்கு அவருடைய மறைவு என்னை பாதித்துள்ளது. எஸ்பிபி சாருடைய மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளாக அவர் இசையுலகில் ஆற்றியிருக்கும் சாதனையை, வேறு யாரேனும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. 6 முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். பத்மபூஷன் விருதையும் வென்றுள்ளார். இந்த பூலோகத்தில் இசை இருக்கும் வரை எஸ்பிபி அவர்கள் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாக இருப்பார். எஸ்பிபி அவர்களின் சாதனையைப் போற்றும் விதமாக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. அப்படி வழங்கினால் எஸ்பிபி-யின் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.…
Read More