கமல்ஹாசனுடன் திரிஷ்யம் – 2 ல் நதியா இணைந்து நடிப்பாரா?

கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா செய்திகளை மட்டுமே வெளியிட்டு வரும் ஊடகங்களுக்கு செய்தி பஞ்சம் அப்போது திரிஷ்யம்-2 படம் சம்பந்தமான யூகங்கள் அதிக நாட்கள் செய்திகளாக வெளியிடப்பட்டன கௌதமிக்கும் – கமல்ஹாசனுக்கும் பிரிவு ஏற்பட்டதால் இணைந்து நடிக்க வாய்ப்பு இல்லை அந்தப்படம் தமிழில் ரீமேக் செய்யும் முடிவு கைவிடப்பட்டது என்றெல்லாம் செய்திகள் வெளியானது இப்போது இரண்டாவது சீசன் தொடங்கியிருக்கிறது திரிஷியம் – 2படம் தமிழில் ரீமேக் செய்யப்படுமா…? அதில் கமல்ஹாசன் நடிப்பாரா..? எப்போது படம் துவங்கும்..? என்பதெல்லாம் பின்னுக்குப் போய் தற்போது “நடிகை நதியா கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கப் போகிறாரா..?” என்கிற கேள்விதான் தமிழ் சினிமாவில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. நடிகை நதியா 1985-ம் ஆண்டு பூவே பூச்சூட வாபடத்தின் மூலமாக தமிழ்சினிமாவில்கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்பு ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டார். சிவாஜி கணேசன், …

Read More

கலைஞரின் கடின உழைப்பை நினைவுபடுத்தும் மு.க.ஸ்டாலின்

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக திரையுலகினர் பலரும் முதல்வரின் பொது நிவாரணத்திற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன், இவரது மகனும், நடிகருமான பிரசாந்த் ஆகிய இருவரும் சென்னையில் இன்றுமுதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் கொரோனா தொற்றை தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு கடுமையாக போராடி வருகிறது முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளோம் முதல்வரின் வேகம் சிறப்பாக உள்ளதுடன் செயல்பாடுகள் பெருமைக்குரியதாக, சிறப்பாக இருக்கிறது கலைஞர் அவர்களுடன் படத்தில் பணியாற்றியிருக்கிறேன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிகள் கலைஞர் கருணாநிதியை எனக்கு நினைவூட்டுகிறது என்றார்

Read More

இயக்குநர்ஷங்கருக்கு கால அவகாசம் வழங்கிய நடிகர் ராம்சரண்

தமிழ்த்திரையுலகில்தயாரிப்பாளர், நடிகர் என இரு தரப்படையும்தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துபடங்களை இயக்கியவர் இயக்குநர் ஷங்கர் படத்தின் கதை, பட்ஜெட், என்று எந்த கேள்வியும் தயாரிப்பாளர்கள் இவரிடம் கேட்க முடியாது தமிழ்சினிமாவின் பாரம்பர்யமான தயாரிப்பு நிறுவனம், தமிழ் திரையுலகின் அடையாளமான ஏவிஎம் நிறுவனம் இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தை தயாரித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் இனிமேல் படங்கள் தயாரிப்பது இல்லை என்கிற முடிவுக்கு வந்தது ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தை ஷங்கர் இயக்கிய போது அவரது கட்டுப்பாடு அற்ற சுதந்திரத்திற்கு கடிவாளம் போட்டது படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் என்னவேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும் அது தேவையா இல்லையா என்பதை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும் என்று ஷங்கருக்கு கூறப்பட்டது அதன் பின் அவரால் தன் இஷ்டப்படி படங்களை இயக்க முடியாமல் போனது லைகா நிறுவனம் தயாரித்த 2.0…

Read More

வலிமை இந்திய அளவில் இரண்டாம் இடத்துக்கு முன்னேற்றம்

தமிழ் சினிமாவில் வசூல் வியாபாரம் இந்த இரண்டிலும் முதல் இடத்தில் நடிகர் விஜய் உள்ளார் நடிகர் அஜீத்குமார் ரசிகர்மன்றத்தை அமைப்புரீதியாக கலைத்துவிட்டார் இருந்தபோதிலும் அவருக்கான ரசிகர் கூட்டம், ஆதரவு நிலைகுலையாமல் தொடர்கிறது அஜீத்குமார் புதிய படங்களில் நடிக்கும்போது அதனை சமூக வலைதளங்களில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விளம்பரம் செய்யும் பணிகளை இன்றுவரை தொடர்கின்றனர்  அஜித் குமார்தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத், அஜித்குமார் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளனர். அஜித்குமார் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1-ம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால் மக்கள் அல்லல்படும்…

Read More

சாணிக் காயிதம் படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்பு

நடிகை கீர்த்தி சுரேஷ், மூத்த நடிகை மேனகாவின் மகள். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தொடரி, பைரவா, ரெமோ, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதை பெற்றார். இதையடுத்து ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். தொடர்ந்து அருண் மாதேஷ் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார் கொரோனா ஊரடங்குகாரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தற்போது படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தான் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ்  வித்தியாசமான கதாபாத்திரத்தில்…

Read More

கமல்ஹாசன் – வெற்றிமாறன் சந்திப்பு எதற்காக நடைபெற்றது

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கப்போவதாக யூகத்தில் வெளியிடப்பட்ட செய்தி உலகம் சுற்றும் வாலிபனாக அனைத்து ஊடகங்களிலும் அவரவர் வசதிக்கு ஏற்ப மிகைப்படுத்தப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது ஆனால் வெற்றிமாறன் தரப்பு அப்படியெல்லாம் இல்லை என்று கூறுகிறது அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன் கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புக்குக் காரணம், மத்திய அரசாங்கத்தால் திரைப்படத்துறைக்கு வரவிருக்கும் ஆபத்து ஒன்றைத் தடுத்து நிறுத்த அனைவரும் இணைந்து போராடவேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகவே கமலஹாசனை வெற்றிமாறன் சந்தித்திருக்கிறார் கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா துறை சம்பந்தபட்ட தீர்ப்பாயத்தை திரைத்துறையினரின் கருத்துக்கூட கேட்காமல் ஒரு அவசர சட்டத்தின் மூலம் கலைத்துவிட்டது சினிமா என்கிற காட்சி ஊடகம் வலிமையானது  சர்வாதிகார, மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சிகளுக்கு எதிராக சினிமா என்கிற காட்சி ஊடகம் இந்தியாவில் வலிமையாக பயன்படுத்தப்பட்டு வெற்றி கிடைத்திருக்கிறது அதனால் தணிக்கை முடிந்து தியேட்டர்கள்,OTT…

Read More

நடிகர் R.K.சுரேஷ் மீது ஒரு கோடி ரூபாய் மோசடிக்குற்றசாட்டு

சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவி வீணா(45) என்பவர்  நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர், பாஜக நிர்வாகி என பன்முக தன்மை கொண்ட ஆர்.கே.சுரேஷ் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது…. என் கணவர் ராமமூர்த்தி எஸ்பிடி என்ற பெயரில் எர்த்மூவர்ஸ் நடத்தி வந்தார். தொழிலில் எற்பட்ட இழப்பைச் சரி செய்ய 2018 ஆம் ஆண்டு 10 கோடி கடன் வாங்கித் தருவதாக சென்னையில் உள்ள கமலகண்ணன் கூறினார். அதன் பேரில் திரைப்பட நடிகரான ஆர்.கே. சுரேஷை, கமலகண்ணன் எனக்கும் என் கணவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஆர்.கே.சுரேஷ் தனக்குத் தெரிந்த வங்கி மேலாளர் மூலமாக கடன் எற்பாடு செய்து தருவதாகவும் அதற்கு கமிஷனாக 1 கோடி கொடுக்கும்படியும் கூறினர். அவரை நம்பி…

Read More

தனுஷ்ன் அடுத்த நகர்வு என்ன?

அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை தனுஷ் முந்திவிடுவார் போல தெரிகிறது. அந்த அளவுக்கு மாதத்துக்கு ஒரு பட அறிவிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தனுஷின் ஒவ்வொரு புது அறிவிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. சமீபத்தில், தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தனுஷுக்கு நீண்ட நாளாக தெலுங்கில் நடிக்க வேண்டுமென்பது ஆசை. இவரின் தாய்மொழி தெலுங்கு. ஆனால், தனுஷ் படங்கள் தெலுங்கில் பொதுவாக டப்பாகி வெளியாகும். இது, முதல் நேரடித் தெலுங்குப் படமாக உருவாகிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ் மற்றும் இந்தியிலும் என PAN இந்தியா ரிலீஸாகப் பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கிறது. நூறு கோடி பட்ஜெட்டில் படம் உருவாவதாகவும் தகவல். மேலும், தனுஷுக்கு அதிக சம்பளம் பெரும் படமாகவும் இது இருக்கும்…

Read More

குடும்பத்தலைவிகளுக்கு 1000ம் ரூபாய் எப்போது?

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதிமுக குடும்பத் தலைவிகளுக்கு 1,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்தச் சூழலில் திமுக ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. ஆளுநர் உரையில்கூட இத்திட்டம் குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், நேற்று (ஜூன் 28) திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக…

Read More

திமுகவின் பிடீம் காங்கிரஸ்-அண்ணாமலை

தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ், பிராந்திய கட்சியாக மாறிவிட்டதாகவும், திமுகவின் பி-டீம் ஆகவும் செயல்படுகிறது எனவும் பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூர் வெங்கமேடு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜூன் 28) நடைபெற்றது. இதில் பாஜக தமிழக மாநிலத் துணைத்தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை, “புதுச்சேரியில் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ஆர்டிகிள் ஒன்றில் இடம்பெற்றுள்ள ’யூனியன் ஆஃப் இந்தியா’ என்ற வார்த்தைகளையே அம்மாநில ஆளுநர் தமிழிசை பயன்படுத்தியுள்ளார். அதற்கான விளக்கத்தையும் அவரே தெரிவித்திருந்தார். ஒன்றிய அரசு என்பதன் மூலம் திமுக சொல்ல வருவது என்ன? அதன் உள்ளர்த்தம் என்ன? 2004ஆம் ஆண்டு முதல் 10…

Read More