ப்ளூ ஸ்டார் – விமர்சனம்

ஒரு விளையாட்டுத் தொடர்பான திரைப்படத்தில் என்னெல்லாம் இருக்க வேண்டும்.  ஒரு தோல்வி, அந்த தோல்வியால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து தேடும் தேடல்,  விளையாட்டிற்குள் அரசியல், பாகுபாடு, வீரர்களுக்குள் முரண்பாடு,  சிறிய சறுக்கல், ஒரு பெரிய போட்டி, அந்தப் போட்டியில் வெற்றி, இவைகளுக்கு நடுவே தேவைப்பட்டால் சிற்சில காமெடிகள், காதல் காட்சிகள் இவைகளெல்லாம் இருக்கும் தானே. “வெண்ணிலா கபடிக் குழு” துவங்கி ‘பிகில்’ வரை  விளையாட்டு தொடர்பான எல்லாப் படங்களும் இந்த டெம்ப்ளெட்டில் தான் அமைக்கப்படும். அதில் இருந்து சற்றும் சறுக்காமல் அமைக்கப்பட்டு இருக்கிறது “ப்ளூ ஸ்டார்” திரைப்படத்தின் திரைக்கதை.  எக்ஸ்டிரா-வாக வர்க்கம் அரசியலுடன் சற்று சாதிய அரசியலையும் ஆங்காங்கே தொட்டுச் செல்கிறது திரைக்கதை. அரக்கோணத்தில் நடக்கும் கதை. அவ்வூரின் காலனிப் பையன்களுக்கும், ஊர்க்காரப் பையன்களுக்கும் கிரிக்கெட் விளையாட்டில் நெடுநாளைய பகை இருக்கிறது.  ஒரு சின்ன சீண்டலில் தங்களுக்குள்…

Read More

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

  தன் சிறுவயதிலேயே தான் ஒரு ஹேர் ஸ்டைலிஷ்ட் ஆக வேண்டும் என்கின்ற ஆசையை தனக்குள் வைத்துக் கொண்டு வளரும் ஒரு சிறுவன், தன் லட்சியத்தை அடைய எவ்வளவு  தடைகளையும்  சிக்கல்களையும் கடக்கிறான் என்பதே “சிங்கப்பூர் சலூன்” சிறுவயதில் ஒரு மனிதனின் ஒட்டு மொத்த தோற்றத்தையும் ஒரு சிகை அலங்கார நிபுணர் நினைத்தால் மாற்றி அந்த மனிதனுக்கான அந்தஸ்தத்தை  சமூகத்தில் உயர்த்திவிட முடியும் என்பதை கண்கூடாக காணும் சிறுவன், அந்த சிகை அலங்கார நிபுணர் “சாச்சா”வாக வரும் லால் மீதும் அவர் செய்யும் தொழில் மீதும் மிகுந்த நேசம் கொண்டு, அந்தத் தொழிலை கற்றுக் கொள்ள முனைகிறான். அதைக் கற்றுக் கொள்ளும் புள்ளியில் அந்த தொழில் மீது காதல் கொண்டு, படித்த வேலைக்குப் போவதை விட பிடித்த வேலையை செய்வதே மேல் என்று முடிவு செய்கிறான். சிறுபிராயத்தில்…

Read More